Home » Category >சென்னை (Page 2)

சென்னையில் சிறப்பு நீதிமன்றம் துவக்கம்

சென்னை, செப்.20:எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் இன்று சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் வழக்காக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன் றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருந்தது.எம்பி,...
மேலும்

பிஎஸ்என்எல் டவரில் ஏறி மிரட்டிய வாலிபர்

சென்னை, செப். 20:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்று காலை நடந்த இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ராயபுரம் பகுதியைச்சேர்ந்தவர் ராகேஷ் குமார் (வயது 26). இவர் அந்த...
மேலும்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சென்னை, செப்.19: மத்திய வங்கக்கடல் பகுதியின் வளி மண்டலத்தில் நீடித்த மேலடுக்கு சுழற்சி வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அவ்வப் போது மழை பெய்து வந்தது....
மேலும்

அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை, செப்.19:கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தும் விசயத்தில் அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ’மோட்டார் வாகன சட்டம் 1988, 1989 படி, 129, 138(3) விதிகளில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருவரும் கட்டாயம் ஹெல்மெட்...
மேலும்

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை, செப் 19:வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசன் கூறினார். சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசன இன்று காலை புறப்பட்டுச்சென்றார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி...
மேலும்

விசாரணை நீதிமன்றத்தை அணுக எச்.ராஜா வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை, செப்.18: பிஜேபி தேசியச் செயலாளர் எச். ராசாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து காவல்துறையினருடன் பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவர் கடுமையாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை...
மேலும்

சென்னையில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.17: தமிழகத்தில் இன்றும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில்...
மேலும்

எச்.ராஜாவுக்கு கோர்ட் உத்தரவு

சென்னை, செப்.17: உயர்நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை கடும் வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க போலீஸ் அனுமதி மறுத்தது. இதனை கண்டித்து போலீசாருடன் பிஜேபி தேசியச் செயலர் எச். ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உயர் நீதிமன்றத்தையும்...
மேலும்

மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதுடெல்லி, செப்.17:பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது டுவிட்டரில்...
மேலும்

சீரியல் நடிகையின் ஆண் நண்பர் உயிரிழப்பு

சென்னை, செப்.17:டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் பயங்கர தீக்காயங்களுடன் அவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு...
மேலும்

சென்னையில் இடியுடன் மழை

சென்னை, செப்.16:சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகல் 4 மணி அளவில் சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்