Home » Category >சென்னை (Page 139)

அதிமுக 46-ம் ஆண்டு விழா: ஓபிஎஸ், இபிஎஸ் கொடியேற்றினர்

சென்னை, அக்.17: அதிமுகவின் 46-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா உருவ படத்துக்கும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தி கட்சிக் கொடியை ஏற்றினார்கள். 46-வது அதிமுக தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலை அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படம் அலங்கரித்து...
மேலும்

‘மெர்சல்’ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்தது

சென்னை, அக்.17: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் 15 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை இன்று காலை வழங்கியது. தெறி படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் மெர்சல். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சென்சார் போர்டு சான்று அளித்துவிட்டதாக...
மேலும்

மெட்ரோ: மே தினப் பூங்கா முதல் டிஎம்எஸ் வரை நிறைவு

சென்னை, அக்.17: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மே தின பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரையிலான சுரங்கப் பணிகள் இன்றுடன் முடிவடைந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் தடுப்பை உடைத்து வெளியே வந்த போது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து விரைவில் துவங்குவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்...
மேலும்

தீபாவளி பண்டிகை: நிரம்பி வழியும் பஸ், ரெயில்

சென்னை, அக்.17: தீபாவளியை கொண்டாடுவதற்கு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் புறப்பட்டு சென்றதால், பேருந்து, ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடை, ஸ்வீட் ஸ்டால், பட்டாசுக்கடைகளிலும் விற்பனை களைக்கட்டி வருகிறது. மக்கள் கூட்டம் மற்றும் ஆங்காங்கே பெய்து வரும் மழையால் நகரின் பல்வேறு இடங்களில்  போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீபாவளி பண்டிகை நாளை (18-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. சென்னையில் தங்கியிருக்கும் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட...
மேலும்

சென்னைக்கு மழை வாய்ப்பு

சென்னை, அக்.16:சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவிக்கிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வடக்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகள் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் மழை பொழிவு இருக்கலாம்.தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு...
மேலும்

பாசனத்திற்கு கோமுகி அணை திறப்பு

சென்னை, அக்.16: விழுப்புரம் மாவட்ட பாசனத்திற்காக கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி, வேளாண் மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் மக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய...
மேலும்

டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது :அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னை, அக்.16: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றும் விடுமுறை நாட்களிலும் மருத்துவர்கள் பணியாற்றுவர்கள் என்றும் சுகாதரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். திருவள்ளுவர் அரசு மருத்துவ மனையில் டெங்கு ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தை விட கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல்கள் உள்ளன. 24 மணி நேரத்தில் எல்லா வகையான வைரஸ் காய்ச்சலை அறிய வசதிகள் உள்ளன. அரசு எடுத்த...
மேலும்

மாமியரை கொன்ற மருமகன் கைது

சென்னை, அக்.16: சொத்துக்களை அபகரிக்க நான்கு ஆண்டுக்கு முன்பு மாமியாரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த மருமகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது;  சென்னை மாங்காடு சிவன்தாங்கலில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 48) கணவர் சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். 2 மகள் உள்ளனர். மூத்த மகளை குன்றத்தூரை சேர்ந்த...
மேலும்

6 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

சென்னை, அக்.16:கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்படும் 6 ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன் படுத்தி சிலர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன.குறிப்பாக 6 டிராவல்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து 6 தனியார் நிறுவன பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல...
மேலும்

விரைவில் 6000 காவலர் தேர்வு:முதலமைச்சர்

சென்னை, அக்.16:தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் மூலம் மேலும் 6000 பேர் விரைவில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீராக உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பணிய நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ‘மக்களால் நான்,...
மேலும்

தமிழகத்தில் மழை பொழிவு

சென்னை, அக். 16:வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் அடுத்த 36 மணி நேரத்தில் இது தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்