Home » Category >சென்னை (Page 1)

தொழிலதிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தாம்பரம், டிச.11: தாம்பரம் அடுத்த பொழிச்சலூரில் தூங்கி கொண்டிருந்த ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொழிச்சலூர், அண்ணா மெயின்ரோடு, சிவசங்கர் தெருவில் வசித்து வருபவர் கங்காசுரேஷ் (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் அந்த பகுதியில் மணல்...
மேலும்

நடு வானில் பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்

சென்னை, டிச.11:  புதுடெல்லியிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமான பயணிக்கு நடு வானில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததால் அவர் குணமடைந்தார். புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு ஏர் இந்திய விமானம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணிகளுக்கு விமான பணிப்பெண்கள் காபி அளித்து வந்தனர். அப்போது ஒரு பயணிக்கு...
மேலும்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, டிச.11: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விரிவாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,...
மேலும்

ரஜினி குடும்பத்துடன் மும்பை சென்றார்

சென்னை, டிச.11:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இன்று தனி விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசியல் பற்றி எதுவும் பேசாமல் படம் பற்றியும், சக நடிகர்கள் பற்றியும் பேசினார்....
மேலும்

டிராபிக் ராமசாமிக்கு கோர்ட் உத்தரவு

சென்னை, டிச.10: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற...
மேலும்

ஜி.கே.மணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை, டிச.10: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கேட்டு, பாமக தலைவர் ஜிகே மணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு அவரது ஆதரவு...
மேலும்

கர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்

சென்னை, டிச.10: மேகதாதுஅணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் முதல்வரை சந்திக்க கர்நாடகா முயல்வது நீதிமன்ற நடவடிக்கையை தடுக்க முயல்வதாகும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது குறித்து அவர், கர்நாடக மாநில நீர் ஆதாரத்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-...
மேலும்

கனிமொழிக்கு சிறந்த பெண் எம்பி விருது

சென்னை, டிச.9: : மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து லோக் மால்ட் செய்தி நிறுவன தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா கூறியதாவது:- லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், மாநிலங்களவையின் 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர் சர்வதேச...
மேலும்

டெல்லியில் சோனியாவை சந்தித்தார் ஸ்டாலின்

சென்னை,டிச.9:புதுடெல்லி சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் 16-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை நேரில் வழங்கிய ஸ்டாலின், அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்....
மேலும்

சென்னையில் கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி

சென்னை, டிச.9:கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கவே மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த 100 வயது தாண்டிய மடாதிபதி சிவகுமார் குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் நேற்று இரவு சென்னை வந்தார். குரோம்பேட்டை மருத்துவமனைக்கு இன்று காலை சென்று மடாதிபதியை பார்த்த பிறகு உடனடியாக பெங்களூர்...
மேலும்

தமிழகம் நோக்கி ‘பேய்ட்டி’ புயல்

சென்னை, டிச.9: தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓர் இரு...
மேலும்