Home » Category >சென்னை

தினகரனுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.15:இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திர சேகர் மீது கடந்த ஜூலை 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நீதிபதி...
மேலும்

பெரியபாண்டியன் குடும்பத்துக்கு கார்த்தி ஆறுதல்

சென்னை,டிச.15: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை...
மேலும்

ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு

சென்னை, டிச.15:இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொருக்குப்பேட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின்போது எடப்பாடி பேசுகையில், அதிமுகவை அழிக்க நினைக்கிற நோக்கில் குக்கர் சின்னத்துடன் ஒருவர் களம் இறங்கி இருக்கிறார். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கி, ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் இன்றைக்கு கட்சியையே ஒழிக்க நினைக்கிறார்....
மேலும்

குக்கர் கடையில் ஐடி ரெய்டு

சென்னை, டிச.11:ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் கடையில் டோக்கன் மூலம் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பார்வையாளர்களுடன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வருமானவரித் துறையினர் இங்கு சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும்

இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் எம்.ஜி.ஆர்.

சென்னை, டிச.14: ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் களைகட்ட தொடங்கி யுள்ளது. அனைத்து கட்சி தலைவர் களும் தீவிர பிரச்சாரம் செய்து வரும்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து எம்.ஜி.ஆர். வேடமணிந்த கலைஞர்கள் பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு

சென்னை, டிச.14: ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை 175 வாகனங்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகளை மீறியதற்காக 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் கூறுகையில், இது...
மேலும்

பள்ளிகூட பஸ்சில் குக்கர்

சென்னை, டிச.14: ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் பள்ளிக்கூட பஸ் ஒன்றில் குக்கர் மற்றும் டிபன்பாக்ஸ்கள் கொண்டு செல்லப்பட்டதை மத்திய போலீசார் சோதனை நடத்தி கண்டுபிடித்தனர். 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள இந்த தொகுதியில் 2 நாட்களுக்கு முன் சுமார் 500 பிரஷர் குக்கர்கள் கைப்பற்றப்பட்டன. சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனின் சின்னம் பிரஷர் குக்கர் என்பதால் இவை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம்...
மேலும்

காற்றில் பறக்கும் கட்சி விசுவாசம்

சென்னை, டிச.14: ஆர்.கே.நகர் தொகுதி பிரச்சாரத்தில் கட்சிக்கு விசுவாசம் என்பது பணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்வதற்கு தொண்டர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை எந்த கட்சிக்கு பிரச்சாரம் வேண்டுமானாலும் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. 2 மணி நேரம் பிரச்சாரம் செய்வதற்கு ரூ.200 முதல் ரூ.300 வரை சம்பளம் கேட்கப்படுகிறதாம். மதியம் 3 மணியிலிருந்து 5...
மேலும்

ஆர்.கே.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தேர்தல் அதிகாரி ஆய்வு

சென்னை, டிச.14: ஆர்கேநகரில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் போலீஸ் கமிஷனர் விசுவநாதன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். ஆர்கேநகர் இடைத்தேர்தலை யொட்டி அங்க மாதிரி வாக்குப்பதிவு அமைக்கப் பட்டுள்ளதை பார்வை யிட்ட பின்னர் தேர்தல் கமிஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்கேநகர் தொகுதியை கண்காணிப்பதற்கு 65 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். வெளியூரிலிருந்து வரும் 175 வாகனங்கள்...
மேலும்

பெண்ணிடம் தங்க செயின் வழிப்பறி

சென்னை, டிச.14: மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மயிலாப்பூர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது 49). இவர் நேற்றிரவு 7 மணியளவில் அப்பு தெருவில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் விஜயகுமாரி அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்து தப்பியோடினர். இது குறித்து மயிலாப்பூர்...
மேலும்

மேளதாளத்துடன் மதுசூதனன் வாக்கு சேகரிப்பு

சென்னை, டிச.14: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம், இளையமுதலி தெரு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக கொருக்குப்பேட்டையில் உள்ள நாகாத்தம்மன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்து தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோருடன் திறந்த ஜீப்பில் மேளதாளங்கள் முழங்க தொண்டர்களுடன் அணிவகுத்து வாக்கு சேகரித்தார்.அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக...
மேலும்