Home » Category >Flash News (Page 3)

சென்னையில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.17: தமிழகத்தில் இன்றும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில்...
மேலும்

எச்.ராஜாவுக்கு கோர்ட் உத்தரவு

சென்னை, செப்.17: உயர்நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றை கடும் வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க போலீஸ் அனுமதி மறுத்தது. இதனை கண்டித்து போலீசாருடன் பிஜேபி தேசியச் செயலர் எச். ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உயர் நீதிமன்றத்தையும்...
மேலும்

மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதுடெல்லி, செப்.17:பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது டுவிட்டரில்...
மேலும்

சீரியல் நடிகையின் ஆண் நண்பர் உயிரிழப்பு

சென்னை, செப்.17:டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் பயங்கர தீக்காயங்களுடன் அவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு...
மேலும்

ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

செங்குன்றம், செப்.16:செங்குன்றம் அருகே அடிதடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:செங்குன்றம் அருகே அலமாதி எடப்பாளையம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராகுல்(வயது 26). இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பெரியார் தெருவில் வந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. அவர்களை...
மேலும்

சென்னையில் இடியுடன் மழை

சென்னை, செப்.16:சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகல் 4 மணி அளவில் சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை, செப்.16:விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்பட்ட 2300 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இந்து அமைப்பினரும், தனியார் அமைப்பினரும் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டனர். இதையடுத்து நேற்று இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்...
மேலும்

சின்னத்திரை நடிகை போலீசில் புகார்

சென்னை, செப்.16:தொலைக்காட்சி தொடர் படப் பிடிப்பில் கலந்துகொண்ட தன்னை ஆண் நண்பர் திருமணம் செய்துகொள்ள தொந்தரவு செய்ததாக கூறி சின்னத்திரை நடிகை நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் முண்டகக்கண்ணி யம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் நடிகை நிலானி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரிடம் பேசியதையடுத்து இருவருக்கும்...
மேலும்

பிஎஸ்எல்வி-சி42 இன்றிரவு விண்ணில் பாயும்

சென்னை,செப்.16:புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட் டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து, இன்றிரவு 10.08 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சுர்ப்ரா செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நோவா எஸ்ஏஆர்’, ‘எஸ்1-4’ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களையும் வணிக...
மேலும்

மகனை கொலை செய்தது ஏன்?:தாய் வாக்குமூலம்

சென்னை, செப்.16:பார்வையற்ற தனது மகனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவரது மனைவி பத்மா (வயது 35). இவர்களுக்கு பரத் (வயது 13) என்ற பார்வையற்ற மகன் இருந்தார். அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கருத்து...
மேலும்

தமிழக சிறைகளில் இன்று அதிரடி ரெய்டு

சென்னை, செப்.16:சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது வெளியானதை அடுத்து தமிழக சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில் சென்னையில் இருக்கும் புழல் சிறையில் இருக்கும் ‘’ஏ” கிளாஸ் சிறை கைதிகள் சிறைக்குள் சகல விதமான சவுகரியங்களை அனுபவிப்பது போன்ற படங்கள், விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி செல்போன்களை பயன்படுத்தி செல்பி எடுப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியான புகைப்படங்கள் பெறும் பரபரப்பை...
மேலும்