w
Home » Category >Flash News (Page 295)

ப்ளூவேல் விளையாட்டு: மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை, செப். 1: ப்ளூ வேல் விளையாட்டினால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில் புதுவை பல்கலை விடுதியில் ப்ளூவேல் விளையாடி வந்த அசாம் மாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உயிரை பறிக்கும் ப்ளூவேல் விளையாட்டால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மொட்டமலையை...
மேலும்

மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

சென்னை, செப்.1: தேங்கிய மழைநீரில் ஆட்டோவை தள்ளியபோது மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பாலியானார். ஆட்டோ டிரைவர் பலியானதற்கு காரணமான மின்சார கேபிளை சரி செய்யாததால் இந்த விபத்து நடந்தது என்று கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வடசென்னை பகுதியில் ஒருமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரைச்சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது...
மேலும்

திமுகவுடன் சேருவதில் எந்த தவறும் இல்லை : திவாகரன்

சென்னை, செப்.1: எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீழ்த்த திமுகவுடன் கைகோர்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். ஈரோட்டில் நேற்று திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திவாகரன், எடப்பாடி பழனிசாமியின் அரசு மூழ்கும் கப்பலாக உள்ளது என்றும், எங்கள் குடும்பத்தினருக்கு அதிமுகவில் மொத்தம் 67 எம்எல்ஏக் களின் ஆதரவு இருக்கிறது என்றும் கூறினார். சேலத்தில் திருமண விழா ஒன்றில் பேசிய திமுக...
மேலும்

மும்பை கட்டிட விபத்து:பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மும்பை,செப்.1தொடர் மழை காரணமாக மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழந்தனர் மும்பையில் கடந்த 29-ந் தேதி பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மும்பை பெருநகரம் வெள்ளத்தில் மிதந்தது.இந்த நிலையில், தென்மும்பையில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம்...
மேலும்

பேச்சுவார்ததை நடத்த விரும்பவில்லை: தங்கதமிழ்ச்செல்வன்

புதுச்சேரி, செப்.1: எடப்பாடி தரப்புடன் பேச்சுவார்ததை நடத்த விரும்பவில்லை என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். ஆளும் அதிமுக அரசில் அங்கம் வகித்த 19 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக சேர்ந்தால் நல்லது தான். அதே நேரத்தில் எங்களது கோரிக்கையை தீர்க்காமல் கவர்னர் பதில்...
மேலும்

மீண்டும் ஒரு ப்ளூ வேல் மரணம்:புதுச்சேரி மாணவர் தற்கொலை

புதுச்சேரி, செப்.1:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு...
மேலும்

சென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை, செப்.1: சென்னையில் வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது.
மேலும்