Home » Category >Flash News (Page 2)

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் உயிரிழப்பு

ஓசூர், நவ.18:கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் ஐந்து பேர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தனர். ஓசூர் அருகே சீதாராம் மேடு பகுதியில், சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ்...
மேலும்

தமிழகத்தை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை, நவ.18:வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைனம் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும்...
மேலும்

கஜா புயல்: 11 அமைச்சர் குழு நியமனம்

சென்னை, நவ.18:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதல் 11 அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. கஜா புயல் பாதிப்பு குறித்து நாளை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பின்னர் நாளை மறுநாள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் பார்வையிட உள்ளார். கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள்...
மேலும்

ரசிகர்களுக்கு ரஜினி கடும் எச்சரிக்கை

சென்னை,நவ.18:சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என்று ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடித்து சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய...
மேலும்

இளவரசி மகன் வீட்டில் 95 சவரன் கொள்ளை

சென்னை,நவ.18: சென்னையில் சசிகலா உறவினரான இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீடு உள்பட 4 இடங்களில் 185 சவரன் நகை மற்றும் ரூ.1.20 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் சசிகலா உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீடு உள்ளது. நேற்று இந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று...
மேலும்

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம், நவ.18:கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்குச்...
மேலும்

20 தொகுதிகளுக்கு ஜனவரியில் தேர்தல்?

சென்னை,நவ.18:தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொதிகளுக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகள் காலியாக உள்ளது, இந்த தொகுதிகளில் அடுத்த 6 மாதத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதி அதன்படி வரும் ஜனவரி மாதம் இந்த 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கான ஆயத்த...
மேலும்

உரிய நிவாரணம் வழங்கப்படும்:முதலமைச்சர்

சென்னை,நவ.18:கஜா புயலால் வீடுகளை இழந்தவர் களுக்கும் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடும், தகுந்த நிவாரணமும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கஜா புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கஜா’ புயல் காரணமாக 56,942 குடிசை...
மேலும்

தலையில் தடியால் அடித்து ரவுடி கொலை

வேலூர், நவ.18:வேலூர் சத்துவாச்சாரியில் 29 வழக்குகளில் தொடர்புடைய பயங்கர ரவுடி தடியால் அடித்தும், கல்லால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மற்றும் மகனை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 35). இவர் வசூல் ராஜா என்ற இன்னொரு ரவுடியின் கூட்டாளி ஆவார். தங்கராஜ் மீது வழிப்பறி, ஆள்...
மேலும்

டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்

பின்னணிப் பாடகி சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மீ டூ விவகாரத்தில் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வைரமுத்து மீது ஏராளமான பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை தெரிவித்து வந்தனர். வைரமுத்து இந்த புகார்களை மறுத்து வந்த போதிலும், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு பெரும் பின்னடைவாக...
மேலும்

கஜா புயல் ருத்ரதாண்டவம்:20 பேர் பலி

சென்னை, நவ.16:கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்ததையடுத்து மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. 10,000 தென்னை மரங்கள் உள்ளிட்ட சுமார் 70,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 21,000 மின்...
மேலும்