Home » Category >Flash News

தூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல்...
மேலும்

தூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடி கலவர நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மாடி மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்தது ஏன் என்பது குறித்தும் வன்முறையை தடுக்க முடியாதது பற்றியும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். நிலைமையை கட்டுக்குள்...
மேலும்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி

9தூத்துக்குடி, மே 22:  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். தடியடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சில் 15 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனம் சூறையாடப்பட்டது. ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி கட்டிடம்,...
மேலும்

பெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்

  சென்னை, மே 21:பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்.கொச்சியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் எங்கள் மையத்தின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேரள மாநில...
மேலும்

ரஜினிகாந்துக்கு குமாரசாமி அழைப்பு

பெங்களூர், மே 21:கர்நாடக அணைகளில் உள்ள நீர் நிலையை ரஜினிகாந்த் பார்வையிட வரலாம் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் விடுவது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் குமாரசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது ரஜினியின் கருத்து குறித்து அவரிடம் கேட்ட பொழுது கர்நாடக...
மேலும்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது:அமைச்சர்

சென்னை, மே 21:சென்னை நீர்நிலைகளில் போதுமான அளவு குடிநீர் இருப்பு இருப்பதால் டிசம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தொலைநோக்கு திட்டம் 23-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதன்...
மேலும்

நிபா வைரஸ் தாக்குதல்:சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை, மே 21:கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். 2004 ஆண்டு நிபா வைரஸ் மலேசியா மற்றும், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டது. இது பழந்தின்னி வௌவால்கள் மற்றும் மரம் ஏறும் நரிகளிடமிருந்து பரவுகிறது. இதில் பாதிக்கப்பட்டு நிறைய பேர் இறந்தனர். ஆப்பிரிக்கா நாடுகளில் ஏபோ...
மேலும்

பெட்ரோல், டீசல் விலை ‘கிடு கிடு’ உயர்வு

சென்னை, மே 21: பெட்ரோல், டீசல்விலை இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள்...
மேலும்

தற்காலிக சபாநாயகரை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, மே 19: கர்நாடகா மாநில சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நீடிப்பார் என்று உச்ச  நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சி  சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை பிளாக் வாரியாக நடத்துவதுடன் சபை நடவடிக்கை முழுவதையும் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்ப அனுமதிக்க...
மேலும்

எடியூரப்பா தப்புவாரா?

பெங்களூரு, மே 19: பலத்த போஸ் பாதுகாப்புக்கு இடையே கர்நாடகா சட்டசபையில் இன்று மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிஜேபி முதல்வர் எடியூரப்பா தப்புவாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ளனர். மேலும் நம்பிக்கை ஓட்டின் போது பரபரப்பு சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 104 இடங்களை பெற்ற பிஜேபி, தனிப்பெரும் கட்சி...
மேலும்

தேவகவுடாவுக்கு மோடி வாழ்த்து

திருப்பதி, மே 18:தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி கோவிலில் தேவ கவுடா சிறப்பு தரிசனம் செய்தார். மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவுக்கு இன்ற பிறந்தநாள். இதைத் தொடர்ந்து தனது மனைவி, மகன் குமாரசாமி மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு குடும்பத்துடன் பெருமாளை வழிபட்டார். இதனிடையே, கர்நாடக அரசியலில் பிஜேபிக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் இடையே தற்போது கடும் மோதல்...
மேலும்