Home » Category >தலையங்கம்

வன்முறை ஒழிப்புக்கு அடித்தளம்

சமூக ஆர்வலர்கள்,கவிஞர்கள், வழக்கறிஞர்கள் , எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு எப்போதுமே சமுதாயத்தில் நன்மதிப்பு உண்டு. இவர்கள் சமூக சீர்கேடுகளை சாட வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் போது குரல் கொடுக்க வேண்டும். இதை விடுத்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், அவர்கள் இடும் கட்டளைகளை செயல்படுத்த முன்வருவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்று. இவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள்....
மேலும்

விலை உயர்வை கட்டுப்படுத்துக

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போவது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. வாகன ஓட்டிகளின் அன்றாடச் செலவு அதிகரித்து இருக்கிறது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு லாரிக் கட்டணம் உயரும் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா நாள் தோறும் 4.37 மில்லியன் பேரல் கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஈரானில் இருந்து இறக்குமதி...
மேலும்

ஆசியப் போட்டி தந்த நம்பிக்கை

இந்தோனேசியாவில் நிறைவடைந்துள்ள 18வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்கள் பெற்றிருப்பது ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் பெற்றுள்ள இந்தியா பதக்கம் பெற்ற நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ல் கிடைத்த 65 பதக்கங்களே இதுவரை பெரிய பொக்கிஷமாக இருந்ததை இந்த ஆசியப் போட்டி முறியடித்து இருக்கிறது. இந்த தடவை இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்த...
மேலும்

கண்டிக்கப்பட வேண்டும்

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயி சோபியா கடந்த திங்கட்கிழமை விமானத்தில் பிஜேபி யை கண்டித்து எழுப்பிய கோஷம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் இவர் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னை கடந்து சென்ற போது இவர்...
மேலும்

சோதனை மேல் சோதனை

தமிழ்நாட்டில் வருமானவரித் துறையும் சிபிஐயையும் மாறி மாறி சோதனைகளை நடத்தி வருகின்றன. இப்போதைய அமைச்சர், முன்னாள் அமைச்சர், இப்போதைய போலீஸ் டிஜிபி, முன்னாள் போலீஸ் ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் வரி, சுங்கவரி, வணிகவரி ஆகியத் துறைகளின் அதிகாரிகளும் சிபிஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2016 டிசம்பரில் அப்போதைய தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர்...
மேலும்

சட்டம் மட்டும் போதுமா?

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு. விண்வெளி தொழில் நுட்பத்தில் பிற நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் உலக அளவில் பெண்களுக்கு ஆபத்தான நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பிரபலமான தாம்சன் ரியாடர்ஸ் பவுண்டேஷன் என்ற செய்தி நிறுவனம்...
மேலும்

பொருந்தாத கூட்டணி

ஜம்மு காஷ்மீரில் 2015 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியுடன் பிஜேபி கூட்டு சேர்ந்த போது அரசியல் வட்டாரத்தில் வியப்பு ஏற்பட்டது. இருவேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பது நீடிக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தேசிய வளர்ச்சி, தீவிரவாத ஒழிப்பு ஆகிய இரண்டையும் குறிக்கோள்களாக கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாக பிஜேபி விளக்கம் அளித்தது. இந்த குறிக்கோள்கள் நிறைவேற பிடிபி முழு...
மேலும்

ஐ.நா.வின் பாரபட்சம்

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், ஜம்மு காஷ்மீரிலும் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் இது குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சில்பாரபட்சமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜோர்டானைச் சேர்ந்த இந்த கவுன்சிலின் தலைவர் ஜீத் ராத் அல் ஜூசைன், ஐ.நா.பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டவர். இவர் வெளியிட்ட 49 பக்க அறிக்கையில் பிழைகள் நிறைந்திருப்பதை இந்திய வெளியுறவுத் துறை...
மேலும்

தூத்துக்குடியில் சீரமைப்பு நடவடிக்கை

தூத்துக்குடியில் 23 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 28.5.2018 அன்று அரசாணைப்படி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு விட்டது. இனி ஆலைக்குள் யாரும் பிரவேசிக்க முடியாது. இந்திய அரசமைப்புப் சட்டம் 48 ஏ பிரிவின்படி சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தவும் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
மேலும்

சிஎஸ்கே யின் வெற்றி ரகசியம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பது முறை விளையாடியிருக்கிறது. ஏழு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. 2013ல் ஸ்பார்ட் பிக்சிங் என்ற சூதாட்டப் புகாருக்கு உள்ளாகி இரண்டாண்டு தடையை சந்தித்தப் பிறகு இந்த அணி மீண்டும் தனக்கு நிகரில்லை என்பதை நிரூபித்து இருக்கிறது. ஐபிஎல் க்கான ஏலம் நிறைவுற்றபோது சிஎஸ்கே அணியின் வீரர்கள் முப்பது வயதை...
மேலும்

கர்நாடகாவில் இழுபறி

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அம்மாநில மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்காததால்,தொங்கு சட்டசபை அமைந்தள்ளது. 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபி தனியாக போட்டியிட்டது. எடியூரப்பா போட்டியாக களம் குதித்தார்.இதனால் பிஜேபிக்கு 40 சீட்டுகள்தான் கிடைத்தன. அதன் பிறகு எடியூரப்பா பிஜேபியில் சேர்ந்தார். பிஜேபியும் காங்கிரசும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தன. மற்றொரு புறம் மதசார்பற்ற ஜனதாதளமும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. தொங்கு சட்ட சபைதான்அமையும் என்று பல்வேறு...
மேலும்