w
Home » Category >ஆசிரியர் பரிந்துரை (Page 46)

நிவாரண பணிகள் தீவிரம்

சென்னை, நவ.4: தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறார். 4,703 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து இன்று காலை 8.30 மணி வரை...
மேலும்

சென்னையில் அதிக மழை பதிவு

சென்னை, நவ.4: சென்னை மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளிலும் மாலை, இரவு வேளைகளில் விட்டு விட்டு இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இதுவரை 93 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், இதுவரை கடல் பகுதியில் மட்டுமே இருந்து வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது ஆந்திரா வரை நீடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை...
மேலும்

புறநகர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன

சென்னை, நவ.4: கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. இந்த இடங்களில் வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி கடந்த 2 நாட்களாகவே நிரம்பி வழிகிறது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கீழ்க்கட்டளை கால்வாய் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. மடிப்பாக்கம் ராஜேஸ்வரி நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், கீழ்க்கட்டளை உள்ளிட்ட...
மேலும்

விடியவிடிய பணியாற்றும் காவல்துறை

சென்னை, நவ.4: வேப்பேரி காவல்நிலைய ஆய்வாளர் வீரகுமார் கையுறை அணியாமல் கால்வாய் அடைப்பை சீர்செய்தததையும், காவல்துறையின் உயர் அதிகாரிகள் காலை முதல் விடியவிடிய போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர். சென்னையில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் வலுபெற்றுவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை நகரில் கடந்த 3 நாட்களாக மக்கள் அன்றாடபணிகளை செய்யமுடியாமல் தவித்து...
மேலும்

காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சென்னை, நவ.4: சென்னையில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து உள்ளார். ‘உங்கள் கடமை அழைப்பு அப்பாலும் தாங்கள் மேற்கொள்ளும் நிவாரண பணிகளுக்கு நன்றி.நல்ல குடிமகன் சீருடை அணியாமலும் பிரகாசிப்பார். காவலர்கள் போல் தமிழர்களும் பணியற்ற வேண்டும். இதுபோல் மற்றொரு டுவிட்டரில் ‘இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு...
மேலும்

41 ஆண்டு காலத்தில் இல்லாத நவம்பர் மழை

சென்னை, நவ.4:சென்னையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை கடந்த 41 ஆண்டுகளில் நவம்பரில் பெய்யாத மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவ டைந்த 24 மணி நேர வானிலை நிலவரப்படி டிஜிபி அலுவலகத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தமிழகத்தில் பதிவான அதிக மழை அளவு இதுவாகும். நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு...
மேலும்

ஒழுகும் ரெயில் நிலைய கூரைகள்

சென்னை, நவ.1: கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ட வாளங்கள் வெள்ளத்தில் மூழ்கு வதுடன் ரெயில் நிலைய கூரைகளும் ஒழுக ஆரம்பித்து உள்ளன. சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் பிரம்மாண்டமான கூரை நேற்று முன்தினத்தில் இருந்து ஒழுகிக்கொண்டு இருக்கிறது. நேற்று முதல் கடற்கரை ரெயில் நிலைய கூரையும் ஒழுக ஆரம்பித்துள்ளது. இதனால் பயணிகள் இந்த ரெயில் நிலையங்களுக்குள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மின்சாரமும்...
மேலும்

மழைக்கு 4 பேர் பலி

சென்னை, அக்.31: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் மிக அதிகபட்சமாக 30 செ.மீ. மழையும், சென்னை தரமணியில் 19 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு காற்று...
மேலும்

டாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை

சென்னை, அக்.31: அனைத்து, ‘டாஸ்மாக்’ கடைகளிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்; விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன. அவ்வளவு தொகையும், ரொக்க பண பரிவர்த்தனையில் நடக்கின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 50க்கும் குறைவான, நவீன டாஸ்மாக் கடைகள்...
மேலும்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இன்று காலமானார்

விருதுநகர் , அக்.30: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலாண்மறைநாடு கிராமத்தில் பிறந்தவார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொன்னுசாமி ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளார்கள் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை பொன்னுசாமி வகித்து வந்தார்.*
மேலும்

களத்தில் இறங்கினார் கமல்

சென்னை, அக்.28:  டுவிட்டர் பக்கத்திலேயே இதுவரை கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று அதிரடியாக எண்ணூர் துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டதோடு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நடிகர் கமல்ஹாசன் நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் சில...
மேலும்