Home » Category >ஆசிரியர் பரிந்துரை (Page 3)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

புதுடெல்லி, செப். 5: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 25 காசுகள் குறைந்தது. இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.79 ஆக உள்ளது. ஆசிய நாடுகள் இடையே இந்திய நாணயத்தின் மதிப்புதான் இந்த ஆண்டில், மிக மோசமான அளவுக்கு குறைந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்குமுன் ரூபாயின் மதிப்பு 71.43 ஆகவும், 73.58 ஆகவும்...
மேலும்

விரைவில் புதிய கட்சி துவங்க அழகிரி முடிவு?

சென்னை, செப்.5: அறிவித்தபடி அமைதிப் பேரணியை நடத்திக் காட்டிய மு.க.அழகிரி, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலினால் பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்க முடியுமா? என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். திமுகவில் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியில் மீண்டும் சேர மேற்கொண்ட...
மேலும்

விமானத்தில் நடந்தது என்ன?: தமிழிசை

சென்னை, செப்.4: தூத்துக்குடிக்கு சென்ற போது விமானத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கி உள்ளார். கோஷமிட்ட பெண்ணின் நடவடிக்கையால் தன்னுடைய உரிமை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். தூத்துக்குடியில் இருந்து இன்று காலை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் விமானத்தில் நான் அமர்ந்து இருந்தபோது பின்னால் இருந்த பெண் திடீரென கைகளை...
மேலும்

அழகிரி பேரணி தேறுமா? பிசுபிசுக்குமா?

சென்னை, செப்.4: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மு.க.அழகிரி நாளை நடத்த உள்ள அமைதிப் பேரணி, வெற்றி பெறுமா அல்லது பிசுபிசுக்குமா என்பது நாளை வெட்ட வெளிச்சமாகி விடும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி இருந்த வரை அமைதி காத்து...
மேலும்

2 பிள்ளைகளை கொன்று காதலனுடன் தாய் ஓட்டம்

சென்னை, செப்.1:  கள்ளக்காதல் கண்ணைமறைத்ததால் பெற்ற 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் ஓடிய தாயின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி...
மேலும்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு

சென்னை, செப்.1:  சென்னை மாநகரின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட மாநகர மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 18,793 குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குசாவடி மையங்களில் இதனை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி அலுவலகத்தின் துணை ஆணையரும், மாவட்ட துணை...
மேலும்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் தங்கம்

ஜகர்தா, செப்.1: ஆசிய விளையாட்டு குத்துச்  சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமித் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.  49 கிலோ எடைப்பிரிவில் நடந்த குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான கஜஸ்கஸ்தான் வீரர் அஸனை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியின் இறுதியில், இந்திய வீரர் அமித் கடுமையாக மல்லுக்கட்டி, கஜஸ்கஸ்தான் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், இந்தியாவிற்கு 14-வது...
மேலும்

மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை

சென்னை, ஆக. 31: போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து ரெயில் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரிக்கு சென்ற சென்னை போலீஸ் கமிஷனர்...
மேலும்

திமுக தலைவரானார் ஸ்டாலின்

சென்னை, ஆக.28: 69 ஆண்டு வரலாறு படைத்த திமுகவிற்கு தனது தந்தை கருணாநிதிக்கு பிறகு 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்....
மேலும்

மதுசூதனன் போர்க்கொடியா?

சென்னை, ஆக.28: முதல்வர் எடப்பாடி பழனி சாமி- துணை முதல்வர் ஓ.பன்னீர்  செல்வம் ஆகியோருடன் அவைத்தலைவர் மதுசூதனன் தனித்தனியாக சந்தித்து பேசினார். அதிமுக-வில் மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக-வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தது. தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு...
மேலும்

பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம்

சென்னை, ஆக.28: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.  பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், அதன் தணிப்புக்கான இயற்கையொட்டிய முறையான அணுகுமுறைகள், நிர்வாக கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முறைகள், அபாயங்களை தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பாதிப்புகளை சீரமைத்தல், பேரிடர் இழப்பீடு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு, பேரிடர் அபாயத் தணிப்பை அடிப்படையாகக்...
மேலும்