Home » Category >ஆசிரியர் பரிந்துரை (Page 2)

டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ சோதனை ஓட்டம்

சென்னை, டிச.6:சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் முக்கிய கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் தேனாம் பேட்டை டிஎம்எஸ் வரையிலான சுரங்க வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.ஜனவரி மாதத்தில் இந்த வழித் தடத்தில் போக்குவரத்து தொடங்க உள்ளது.முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் இறுதிப்பணியாக வண்ணாரப்பேட்டையில்...
மேலும்

தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

சென்னை, டிச.6:மேகதாது அணை விவகாரம் குறித்து நேரில் பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவகுமார் கேட்டு கொண்டுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.5912 கோடியை ஒதுக்கி திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள குழுமம்...
மேலும்

புஜாராவின் சதத்தால் மீண்டது இந்தியா

அடிலெய்ட், டிச.6: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிய இந்திய அணியை, புஜாரா சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தன் அணி டாப் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அனைவரும் வந்த வேகத்தில்...
மேலும்

நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார்

சென்னை, டிச.6: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர். திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நெல் வகைகளை காக்க பாடுபட்டதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். அவர்  169 பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக புற்று...
மேலும்

மொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல்

புதுடெல்லி, டிச.5:வங்கிகளிடம் வாங்கிய கடனில் அசல் முழுவதையும் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்குக்...
மேலும்

மேகதாது : நாளை சிறப்பு தீர்மானம்

சென்னை, டிச.5:மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி நாளை தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது. அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட...
மேலும்

‘தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் பிஜேபி’ மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திருச்சி, டிச.4: மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பிஜேபி அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் திமுக தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:- இந்த ஆர்ப்பாட்டம் அரசியலுக்காக அல்ல, விவசாயிகளை காப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேகதாது அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு திட்டமிட்டபோதே திமுக...
மேலும்

கரு பரிசோதனை: கணவருக்கும் சிறை

சென்னை,டிச.4: கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறிய சட்ட விரோதமாக சோதனை நடத்தினால் கர்ப்பிணி பெண்களின் கணவரும் கைது செய்யப்படுவார் என தமிழக மருத்துவ சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக பரிசோதனைக்கூடம் நடத்திய கருவில் இருப்பதுஆணா? பெண்ணா? என்பதை தெரிவித்து வந்த ஆனந்தி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.  இந்த மாவட்டத்தில் 6 மையங்கள் இதுபோல் செயல்பட்டு வந்ததை மருத்துவ துறை கண்டு...
மேலும்

கடற்கரை-செங்கல்பட்டுக்கு மீண்டும் பாஸ்ட் ரெயில்கள்

சென்னை, டிச.4: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மீண்டும் பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் விடப்பட உள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க கடற்கரை மார்க்கத்தில் 2 புதிய  மின்சார ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே விடப்பட்டு இருந்த பாஸ்ட்  பாசஞ்சர் ரெயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வந்த 5 பேர் கடந்த ஜூலை மாதம் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தடுப்பு சுவரில் அடிபட்டு உயிரிழந்தனர்....
மேலும்

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை,டிச.3:மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி உச்சநீதி மன்றத்தில் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை...
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை, டிச.3:மாசு ஏற்படுத்தும் வகையில் 3.50 லட்சம் டன் கழிவுகளை கொட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யிலிருந்து வெளியாகும் கழிவுநீர் காரணமாக நிலத்தடி நீர் மாசு ஏற்படு வதாக கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து...
மேலும்