Home » Category >ஆசிரியர் பரிந்துரை

ரபேல் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி,டிச.14:பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூறிவந்த ரபேல் ஒப்பந்த புகார்கள் குறித்து விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரிய பொது நல மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகளில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை...
மேலும்

வட தமிழகத்தில் 2 நாள் கனமழை பெய்யும்

சென்னை, டிச. 14:வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதன் விளைவாக வடக்கு தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக பகுதிகளுக்கு இடையே நீடித்து வந்தது.இந்நிலையில் இது குறைந்த காற்றழுத்த...
மேலும்

சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, டிச.13:மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக மும்பை சென்றார். நேற்று பிரபல தொழிலதிபர் அம்பானியின் இல்லத்திருமண விழா வில் மனைவி லதாவுடன் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்...
மேலும்

57 நாட்களுக்கு பிறகு உயர்ந்தது பெட்ரோல் விலை

சென்னை, டிச.13: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 57 நாட்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதே சமயம் டீசல் விலை உயர்வின்றி 2 நாட்களாக அதே விலையில் நீடிக்கிறது. 5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன...
மேலும்

ம.பி., ராஜஸ்தானில் இழுபறி

புதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் இடையே இழுபறி நிலை நிலவுகிறது. சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி மிசோரமில் ஆட்சியை இழந்துள்ளது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில்...
மேலும்

நாளை 5 மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்?

புதுடெல்லி, டிச.10:  சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் முடிந்தது. ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 7-ந் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த 5 மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள்...
மேலும்

ரூ.55 கோடி பறிமுதல்

சென்னை, டிச.8: சென்னையில் பாலாஜி குழுமம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பாலாஜி குழுமத்தில் இருந்து மட்டும் ரூ.40 கோடி பணம் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதி களில் உள்ள நிறுவனங்களில் வரிஏய்ப்பு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து பல்வேறு...
மேலும்

பெண் உரிமைக்காக குரல் கொடுத்தவர் பாரதியார்

சென்னை, டிச.8: பெண் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.  பாரதியார் போன்றவர்கள் இந்த நாட்டின் விடுதலைக்காக செய்த தியாகங்களை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார். சென்னையில் இன்று நடைபெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசியதாவது:- சுப்பிரமணிய பாரதியார் பன்முகத்...
மேலும்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி, டிச.8: காவிரி ஆணையத்தின் தற்காலிக தலைவர் மசூத் ஹூசைன், நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இருந்து கொண்டு பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும் என கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் ஹூசைன்...
மேலும்

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு எந்திரம்

ஜெய்ப்பூர், டிச.8: ராஜஸ்தான் மாநில  சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு எந்திரம் பெட்டியுடன் சாலையில் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இந்த மாநிலத்தில் நேற்று 7-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை தொடர்ந்து இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பரன் மாவட்டம் கிஷன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஷகாபாத் பகுதியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்...
மேலும்

தஞ்சைபெரியகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு தடை

தஞ்சை, டிச.7:புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் கட்டணம் வசூலித்து ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கோகா பயிற்சி அளிக்கும் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீஸ்ரீ.ரவிசங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்,வி.சி, தி.க, தஞ்சை பெரியகோவில் மீட்பு குழு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டம் செய்த 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்த கோர்ட் தடை விதித்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்...
மேலும்