Home » Category >உலகம் (Page 5)

சீன உறவை மேம்படுத்த 5 அம்ச திட்டம்

வுஹான், ஏப்.28: இந்தியாவும் சீனாவும் அதன் எல்லைகளில் அமைதியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளன. இரண்டு நாள் பயணமாக சீனா  சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியதை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு டோக்லாமில் படைகள் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற...
மேலும்

ஜார்ஜ் புஷ் மனைவி மரணம்

ஹூஸ்டன்,ஏப்.18:அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா தமது 92-வது வயதில் மரணமடைந்தார். அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ். இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு...
மேலும்

மோடிக்கு ஸ்வீடனில் உற்சாக வரவேற்பு

ஸ்டாக்ஹோம், ஏப்.17: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஸ்வீடன் சென்றார். தலைநகர் ஸ்டாக்ஹோமில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெறும் நார்டியாக் அமைப்புகளின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பிரதமர் மோடி 5 நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஸ்வீடன்...
மேலும்

அமெரிக்கா-ரஷ்யா போர்:தடுக்க ஐநா சபை முயற்சி

நியூயார்க்,ஏப்.15:சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் மூளுவதை தடுக்க ஐநா சபை அவசரமாக கூடுகிறது. அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா...
மேலும்

காமன்வெல்த்தில் சுஷில்குமார் சாதனை

கோல்ட் கோஸ்ட், ஏப்.12:காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க...
மேலும்

துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்

கோல்ட் கோஸ்ட், ஏப்.10: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டென்னிஸ், பாட்மிண்டன் அணிகள் தங்கப்பதக்கம் வென்றன. துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தங்கம் வென்றார். இதன் மூலம், 20 தங்கப்பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்று பதக்க வேட்டை நடத்திவருகின்றன. இதில்,...
மேலும்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜகார்தா, மார்ச் 26: கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ., ஆழத்தில் ஏற்றபட்ட கடும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கே சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல்...
மேலும்

ரஷ்யாவில் பயங்கர தீ விபத்து: 37 பேர் கருகி சாவு

மாஸ்கோ, மார்ச் 26: ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய, 37 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவி லிருந்து சுமார் 3600 கி.மீ தொலை வில் சைபீரியா மாகாணத்திலுள்ளது கெமெ ரோவோ நகரம். இங்குள்ள பிர மாண்ட ஷாப்பிங் மால் ஒன்றில் மக்கள் வெள்ளம் அலைமோதிக்கொண்டிருந்தது. பொருட்கள் வாங்கவந்தோர், திரையங்கு வந்தோர் என...
மேலும்

சமூக ஊடகங்களில் வேற்று கிரக தக்காளி

வாஷிங்டன், மார்ச் 23:  வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி பழம் உருவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் பயனாளர் பகிர்ந்து உள்ளார். இது ‘ஸ்ட்ரோமோட்டோ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது, தி சன் தகவல் வெளியிட்டு உள்ளது. இது குறித்து குரோக்ஸ்பீன்ஸ் கூறும் போது ’ஸ்ட்ராபெரி’ வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும்,...
மேலும்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 13 பேர் பலி

ஹனோய், மார்ச் 23: வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கினர். பலர் கீழே...
மேலும்

பேஸ்புக் தவறை ஒப்புக்கொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்

கலிபோர்னியா, மார்ச் 22:கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா விவகாரத்தில் தவறுகள் நடைபெற்றதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க தனியார் தொலைக்காட்சியில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உலகம் முழுவதும்...
மேலும்