Home » Category >உலகம் (Page 4)

ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி

கவுஹாத்தி, ஜூன் 19:  அசாம் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மெஷினுக்குள் புகுந்த எலி, அதிலிருந்த ரூ. 12 லட்சம் பணத்தை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்ய வங்கி நிர்வாகம் கடந்த 11-ந் தேதி...
மேலும்

‘டிரம்ப் சந்திப்பில் என்னை கொல்ல சதி’: வட கொரிய அதிபர்

பியாங்யோங், ஜூன் 9: அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் சென்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே,...
மேலும்

எரிமலை வெடிப்பில் சிக்கி 106 பேர் உயிரிழப்பு

கவுதமாலா, ஜூன் 8:கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள பியூகோ எரிமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. எரிமலை வெடித்த காரணத்தால் புகையும், எரிமலை குழம்பும் வேகமாக பரவியுள்ளது. இதை வேடிக்கை பார்த்த பலர்தான் முதலில் மரணம் அடைந்துள்ளனர். முதல்...
மேலும்

உலக கோப்பை கால்பந்து: ரசிகரின் விநோத பயணம்

பெர்லின், ஜூன் 8:உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளாராம். உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் வரும் 14-ந் தேதி தொடங்க உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், அந்நாட்டில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெர்மனி ரசிகரின் வினோத பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹூபோல்ட் விர்த் என்ற அந்த நபர், தனது பழமையான...
மேலும்

எரிமலை வெடித்து 25 பேர் உயிரிழப்பு

கவுதமாலா சிட்டி, ஜூன் 4:கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறி ஏற்பட்ட புகையில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் தலைநகரில் 40 கி.மீட்டர் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. அதில் இருந்து 8 கி.மீட்டர்...
மேலும்

படகு கவிழ்ந்து 50 பேர் பலி

துனிஸ், ஜூன் 4:துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலியாயினர்.துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர். இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு...
மேலும்

 பிளாஸ்டிக் பைகளை விழுங்கிய திமிங்கலம் பலி

பாங்காங், ஜூன் 3:தாய்லாந்தில் 8 கிலோ பிளாஸ்டிக் பைகளை விழுங்கிய திமிங்கலம் உயிரிழந்தது. திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு பிளாஸ்டிக் பைகள் காரணமாக அமைந்திருப்பது இயற்கை ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது. தாய் லாந்தின் தெற்கே உள்ள சோங்லா மாகாண கடற்கரையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அப்போது திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பைகள் வெளியேறின. சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக இறந்து போனது....
மேலும்

நிபா வைரஸ்: பழம், காய்கறி இறக்குமதிக்கு தடை

அபுதாபி, மே 30 :கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் தாக்கி இதுவரை 2 நர்ஸுகள் உள்பட 14 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம்...
மேலும்

பாகிஸ்தான், ஆப்கானில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத், மே 9:இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் அதிர்வு ஏற்பட்டது. 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேறி சாலைக்கு வந்தனர். பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்பட வில்லை. இதே நாளில் கடந்த ஏப்ரல் மாதம் (9-ம் தேதி) ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில்...
மேலும்

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 25 பேர பலி

காபூல், ஏப்.30:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள ஷாஸ்தாரக் அடுத்தடுத்து இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 45-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

ரஷ்யாவில் இந்திய விமானம் கோளாறு

புதுடெல்லி, ஏப்.29:பழுது பார்ப்பதற்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய கடற்படை விமானம் அங்கு சோதனை ஓட்டத்தின்போது அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இந்திய-ரஷ்ய கடற்படை ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஐஎல் 38 என்ற இந்த விமானம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது ஆகும். அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாஸ்கோ சென்றிருந்தபோது இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உடன்பாடு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் ரஷ்யாவில்...
மேலும்