w
Home » Category >உலகம் (Page 36)

அயர்லாந்தின் பிரதமராக லியோ வரத்கர் தேர்வு

டப்ளின், ஜூன் 15: அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் 11வது பிரதமராவார். அயர்லாந்தில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அயர்லாந்தின் புதிய பிரதமராக லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 38 வயதாகும் லியோ ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறப்படுகி றது. எனவே இவர் அயர்லாந்தின் முதல் ஓரினச் சேர்க்கை பிரதமர்...
மேலும்

அமெரிக்க எம்பி கவலைக்கிடம்

வாஷிங்டன், ஜூன் 15: அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் நேற்று, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் குண்டு பாய்ந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், வர்ஜீனியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சி செய்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம...
மேலும்

லண்டனில் பற்றி எரியும் 27 மாடி கட்டிடம்

  லண்டன், ஜூன் 14:இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 1974ல் கட்டப்பட்ட கட்டடம் தீயில் கருகி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லண்டன் வொயிட் சிட்டி, லத்திமர் சாலையில் கிரன்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மொத்தம் 27 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென...
மேலும்

விஜய் மல்லையா – ‘திருடன்..திருடன்’ என ரசிகர்கள் கேலி

லண்டன், ஜூன் 12: இந்தியா – தெ.ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியை காண ஓவல் மைதானத்திற்கு வந்த தொழிலதிபர் விஜய் மல்லைவை பார்த்து ‘திருடன்…திருடன்’ என ரசிகர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய்...
மேலும்

பாக். வாலிபருக்கு மரண தண்டனை

லாகூர், ஜூன் 12: பாகிஸ்தானில் முதன் முதலாக, சமூக வலைத்தளத்தில் மத நிந்தனை கருத்துகளை வெளியிட்டவருக்கு மரண தண்டனை விதித்து, பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாகிஸ்தான் 97 சதவீதம் முஸ்லிம் மக்களை கொண்டுள்ள நாடு ஆகும். அங்கு மத விரோத கருத்துகளை யாரேனும் வெளியிட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மத நிந்தனை...
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிபர் இமானுவல் மேக்ரான் முன்னிலை

பாரிஸ், ஜூன் 12: பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வக்குப்பதிவு நடத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றார். இந்த நிலையில் 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளைப்...
மேலும்

பிரிட்டன் பார்லி. தேர்தலில் இழுபறி

லண்டன், ஜூன் 9: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை இருப்பதாகவும் அதனால் அங்கு தொங்கு அவையே அமையும் என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும்  தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்திந் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை...
மேலும்

ஜப்பானில் கோர விபத்து மலையில் விமானம் மோதி 4 பேர் பலி

டோக்கியோ, ஜூன் 5: ஜப்பான் நாட்டில் பனியால் மூடப்பட்டுள்ள வடக்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள் ஜப்பான் நாட்டில் பனியால் மூடப்பட்டுள்ள வடக்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானம் விபத்துக்குள்ளானது பற்றி தகவல் அறிந்து 14 மணி நேரத்திற்குப் பின்னர்தான் மீட்புப்படையினர் அங்கு...
மேலும்

தண்ணீருக்கும் சுவை உண்டு: விஞ்ஞானிகள் தகவல்

 கலிபோர்னியா, ஜூன் 5 : ‘தண்ணீர் சுவையற்ற திரவம்’ என்ற வாதம் இருந்த வந்தது. தற்போது தண்ணீருக்கும் சுவை உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘தண்ணீர் சுவையற்ற திரவம்’ என்ற வாதம் இருந்த வந்தது. தற்போது தண்ணீருக்கும் சுவை உண்டு. நாக்கில் உள்ள சுவை அறியும் செல்கள் தண்ணீரின் சிறப்பு சுவையை அறிய உதவுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த ஆய்வு சுண்டெலிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது...
மேலும்

மலைப்பாம்பை வீழ்த்திய ராஜநாகம்

சிங்கப்பூர், ஜூன் 5:சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட மலைபாம்பு – ராஜநாகம் சண்டைக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த டிரலோப்பி என்பவர் தனது அண்டை வீட்டுக்காரர் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேக்ரிச்சிக் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ராஜநாகம் ஒன்றும் மலைப்பாம்பு ஒன்றும் சண்டையிடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் இரண்டும் ஆக்ரோஷமாக காணப்பட்டாலும், இறுதியில் ராஜநகம் மலைப்பாம்பை...
மேலும்