Home » Category >உலகம் (Page 3)

மனிதனால் உருவாக்கப்பட்டதே சேதுபாலம்:யுஎஸ்

நியூயார்க், டிச.13:ராமர்சேது பாலம் மனிதனால் கட்டமைக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் வெளியிட்டுள்ள அந்த ஆவணப்படம் 2நிமிடம் ஓடுகிறது. அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலங்கை தீவுக்கும் இடையே பாலம்...
மேலும்

அமெரிக்கா மீது பொருளாதாரத் தடை

கெய்ரோ, டிச.10: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா அங்கீகரித்துள்ளதை ஐநா ஏற்க மறுத்த நிலையில், ஐநாவை அமெரிக்க தூதர் கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ள...
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இந்திய மாணவர் படுகாயம்

சிகாகோ, டிச.10: அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கியால் சுட்டவரை அந்நாட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹைதராபாத் பகுதியை சேர்ந்த முகமது அக்பர் என்ற நபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் சிகாகோவில் உள்ள ‘டேவ்ரி’ பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மர்ம நபர் ஒருவரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு உள்ளார். சாலையில் அவர் சென்று...
மேலும்

கரைஒதுங்கிய 3 இலங்கை மீனவர்கள்

நாகப்பட்டினம், டிச.9: நாகப்பட்டினம்அருகே படகு பழுதானால் வேளங்கண்ணி அருகே 3 இலங்கை மீனவர்கள் கரை ஒதுங்கி உள்ளனர். அவர்களது பெயர் கடகஜன், வீஜேந்திரன் எனவும் கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. 3 மீனவர்களும் இலங்கை பருத்தி துறை பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

இறந்த குழந்தை உடலை பிரிட்ஜில் வைத்த தாய்

லீமா, டிச.8: பெரு நாட்டின் லீமா என்ற பகுதியை சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும் போதே சரியான வளர்ச்சி இல்லாமல் பிறந்துள்ளது. பிறந்த 24 மணிநேரத்தில் அந்த குழந்தை மரணம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் படி...
மேலும்

ஐ.நா. சபை நாளை அவசரமாக கூடுகிறது

நியூயார்க், டிச.7:சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் நாளை அவசரமாக கூடுகிறது. டிரம்பின் அறிவிப்பால் மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

சுவிஸ் வங்கி கணக்கு : 50 பேருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, டிச.5: சுவிச்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்துள்ள 50 இந்தியர்களை ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக குழு அமைத்தது. இந்த குழு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் சுவிஸ் கணக்கு வைத்துள்ள இந்தியர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில்...
மேலும்

லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா

லண்டன், டிச.4: தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் கோர்ட்டில் இன்று தொடங்குகிறது. அதில் அவர் ஆஜராகிறார். இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில்...
மேலும்

6,000 கார் டயர் பஞ்சர்:பலே நபர் கைது

பாரிஸ், டிச.4:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபர் பாரிஸில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 6 வருடமாக மர்ம நபர் ஒருவர் கார்களில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்து இருக்கிறார். இந்த ஆறு வருடங்களில் மட்டும் 6,000 க்கும் அதிகமான கார்களுக்கு இவர் பஞ்சர் செய்து இருக்கிறார். இவர் மீது 1,100க்கும் அதிகமான நபர்கள் போலீசில்...
மேலும்

தற்கொலைப்படை தாக்குதல் :6 பேர் பலி

காபூல், டிச.4:ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் மோட்டார் பைக்கில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹர் மாகாண தலைநகரான ஜலலாபாத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே நேற்று மாலை மோட்டார் பைக்கில் வந்த தீவிரவாதி, கூட்டமான மக்கள் பகுதி அருகே வந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இந்த கோர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள்...
மேலும்

விஷம் குடித்த ராணுவ தளபதி மரணம்

ஆம்ஸ்டர்டாம்,நவ.30: கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய ராணுவத்தின் கமாண்டராக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர் குற்றவாளிகள் என அறிவித்தது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்தின் தி ஹோக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில்...
மேலும்