w
Home » Category >உலகம் (Page 28)

பழமையான பள்ளி தீ விபத்து

வாஷிங்டன், செப்.13: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளி ஒன்றில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். டம்பா நகரில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பள்ளி ஒன்றில் திடீரென தீப்பற்றியது. பள்ளியின் மேற்கூரையில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிர்ஷட வசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும்

அரசுப் பள்ளிகளில் ஜெய்ஹிந்த்

போபால், செப்.13:மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க மத்திய பிரதேச அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் வருகைபதிவின் போது மாணவர்கள், ’யெஸ் சார் – யெஸ் மேடம்’ என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என மத்திய பிரதேச மாநில கல்வி அமைச்சர் விஜய் ஷா உத்தரவிட்டுள்ளார். வருகைபதிவின் போது அனைத்து மாணவர்களும் ஜெய்ஹிந்த் சொல்ல அவர்களை பழக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள்,...
மேலும்

9வது முறையாக தாத்தாவான அமெரிக்க அதிபர்

நியூயார்க், செப்.13:அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு பிறந்த குழந்தையின் மூலம் அவர் 9வது முறையாக தாத்தாவானார். அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகனான எரிக் டிரம்ப் – லாரா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை எரிக் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் டிரம்ப் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரக்குழந்தை பிறந்ததற்கு...
மேலும்

சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் அதிபர்

சிங்கப்பூர், செப்.12: சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான பந்தயத்தில் இருந்த இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் மற்றொரு பெண் வேட்பாளரான ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாக உள்ளார். சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி வரும் 23ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம்...
மேலும்

மியான்மரில் மனித உரிமைகள் மறுப்பு: ஐ.நா. தலையிட வேண்டும்

யாகூன், செப்.12: மியான்மரில் ராகினோ மாகாணத் தில் மனித உரிமைகள் மீறப்படும் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் சுவீடன் வலியுறுத்தியுள்ளது. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ராகினேவில் மீண்டும் வன்முறை வெடித்து உள்ளது. ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது. இந்த சண்டையின் காரணமாக அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்....
மேலும்

ஸ்பெயினில் சுற்றுலா சென்ற 3 பெண்கள் கற்பழிப்பு

மாட்ரிட், செப்.11: ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற 3 இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள சுற்றுலா பகுதியான மேஜோரிகா என்ற கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரித்தானி, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 பெண்கள் அப்பகுதியில் மது அருந்திய போதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் அடிக்கடி...
மேலும்

‘இர்மா’ புயல் கோர தாண்டவம்

வாஷிங்டன், செப்.11:இந்த நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் இர்மா புயல் அமெரிக்காவின் பல பகுதிகளை சின்னபின்னமாக்கியுள்ளது. மணிக்கு 220 கி.மீ.வேகத்துடன் சூறாவளி காற்றும் மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த வெப்ப காற்றும், குளிர்காற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இணைந்து கடலை கடக்கும்போது வலுப்பெற்று...
மேலும்

அமெரிக்கா:பயங்கர புயல் ‘இர்மா’ நெருங்குகிறது

வாஷிங்டன், செப்.10: இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடாவை நெருங்குவதால், மக்கள் நடமாட்டம் இன்றி மியாமி நகரம் மற்றும் புளோரிடா வெறிச்சோடியது. கியூபாவில் கரையைக் கடந்த போது 3ஆம் நிலைப் புயலாக வலு குறைந்த இர்மா, மீண்டும் 4ஆம் நிலைக்கு வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது.தற்போது ஃபுளோரிடா நோக்கி இர்மா நகர்ந்து வருவதால், மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் காற்று அதிவேகத்தில் வீசுகிறது. மணிக்கு 200 முதல் 250 கிலோ...
மேலும்

3500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை

கெய்ரோ, செப்.10: எகிப்து நாட்டில் 3,500 வருடங்களுக்கு முந்தைய கல்லறை ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். நைல் நதிக்கரையில் உள்ள லக்சர் என்ற நகரில் 3000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு பொற்கொல்லரின் கல்லறையில் இருந்து சிலைகள், மம்மிக்கள், மற்றும் நகைகளை தோண்டி எடுத்து வருகின்றனர். மிகுந்த கலைநயத்துடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மரத்தாலான சவப்பெட்டி, பொற்கொல்லர், அவரது மனைவி, மகன் ஆகியோரின் சிறிய அளவிலான உருவச் சிலைகள்...
மேலும்

11 ஆண்களை மணந்த தாய்லாந்து பெண்

பாங்காக், செப்.9: தாய்லாந்தில் இளம் பெண் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்காக 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தாய்லாந்தில் உள்ள நங் ஹாய் மாகாணத்தை சேர்ந்த பெண் ஜரியாபார்ன் புயாயய் (வயது32). இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக புதிய முறையை கையாண்டார். தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்....
மேலும்

7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோ, செப்.8: மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் 8 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நிலநடுக்கமான இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக தெரியவில்லை. ஆனால் மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டி கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றனர். நிலநடுக்கத்தின் மையப் பகுதி கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்ஸிகோவின்...
மேலும்