w
Home » Category >உலகம் (Page 26)

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் எரிமலை

ஜகார்த்தா, செப்.23: இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகங் எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர்...
மேலும்

பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

ஜெனிவா, செப்.22:ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
மேலும்

பேஷன் வீக்கில் உலகின் அழகான சிறுமி

நியூயார்க், செப்.21: உலகின் அழகான சிறுமி என்று கூறப்பட்ட தைலேன் பிளாண்ட் முதல் முறையாக பேஷன் வீக்கில் கலந்து கொண்டார். தைலேன் பிளாண்ட் முதல் முறையாக தனது 4வது வயதில் மாடலாக அறிமுகமானார். பின்னர் பிரன்ச் வோக் பத்திரிகையில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது. தனது டீனேஜ் வயதை எட்டாத நிலையிலேயே அவர் உலகின் மிக அழகான சிறுமி என்ற பெயரை பெற்றார். தற்போது தைலேன்னுக்கு 16 வயதாகிறது....
மேலும்

கொடி வீரன் ஃபர்ஸ்ட் லுக்

கம்பெனி புரொடக்ஷன் சார்பில் சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம் கொடி வீரன். இப்படத்தில் அவரது ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். இவர்களுடன் சனுஷா, பூர்ணா, விதார்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிர் ஒளிப்பதிவு செய்ய ரகுநந்தன் இசைமைக்கிறார். கதை திரைக்கதை எழுதி முத்தையா இயக்குகிறார். ஏற்கனவே குட்டிபுலி படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
மேலும்

திருட வந்த இடத்தில் பிணமான திருடன்

லண்டன், செப்.20: திருடன் ஒருவன் திருட சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக அந்த வீட்டிலேயே பிணமானான். இங்கிலாந்தில் உள்ள பிராட்போட் நகரில் மருந்த விற்பனை மையம் நடத்தி வந்த ஒருவரின் வீட்டில் நுழைய முற்பட்ட திருடன் ஒருவன் வீட்டின் மீது ஏறி கழிவறை கூரையை பிரித்து அதன் மூலமாக உள்ளே இறங்க முயற்சித்துள்ளான். ஆனால் கூரையில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக ஆடை கிழிந்து தடுப்பு...
மேலும்

மெக்சிகோவில் பூகம்பம்: 138 பேர் பலி

மெக்சிகோ சிட்டி,செப்.20: மெக்சிகோவில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூகம்பம் காரணமாக 138 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் வீடுகளை இழந்து பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூப்லா, ராபோசாஆகிய பகுதிகளில் மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த பூமியதிர்ச்சி 7.1 ரிக்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம்...
மேலும்

இவாங்காவுடன் சுஷ்மா சந்திப்பு

நியூயார்க், செப்.19: ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார். பெண்களுக்கான...
மேலும்

லாஸ்ஏஞ்சல்சில் 2028 ஒலிம்பிக் தீபம்

நியூயார்க், செப்.17: அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை லாஸ் ஏஞ்சலீசுக்கு வழங்கப்பட்டதை முன்னிட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் டெகத்லான் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க தடகள வீரர் ராஃபர் ஜான்சனும் லாஸ் ஏஞ்சலீஸ் மேயரும் இணைந்து பொத்தானை அழுத்தி ஒலிம்பிக் தீபத்தை...
மேலும்

ருமேனியாவில் புயல்:8 பேர் பலி

புகாரெஸ்ட், செப்.18:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் நேற்று கடும் புயல் தாக்கியதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் மின்சாரம், குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் நேற்று தாக்கிய கடும் புயலால் திமிசோயரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு மணிக்கு 100 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மழையும் கொட்டியது. புயல் மழையில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு...
மேலும்

தாலிம் புயல் சீற்றம்: ஜப்பான் பாதிப்பு

டோக்கியோ, செப்.18: ஜப்பானில் வீசும் தாலிம் புயலால் அந்நாட்டில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள், ரயில் சேவை கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்னர் இர்மா என பெயரிடப்பட்ட புயல் அமெரிக்காவில் வீசி அந்நாட்டை சின்னாபின்னப்படுத்தியது. இந்நிலையில் தாலீம் எனப் பெயரிடப்பட்ட புயல் தற்போது ஜப்பானை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பசுபிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தாலிம் புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை மிக மோசமாக தாக்கி வருகிறது....
மேலும்

இடைத்தேர்தல்: நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி

லாகூர், செப்.18: பாகிஸ்தானின் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி வெற்றி பெற்றார். ’பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் செரீப்பின்...
மேலும்