Home » Category >உலகம் (Page 2)

மருத்துவமனையில் தீ:41 பேர் கருகி சாவு

சியோல், ஜன.26:  தென்கொரியாவின் மிரியாங் நகரில் உள்ள செஜாங் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி காலை ஏழரை மணிக்குத் தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மருத்துவமனையில் இருந்து இருநூற்றுக்கு மேற்பட்டோரை உடனடியாக வெளியேற்றினர். தீவிபத்தில் மருத்துவமனைக் கட்டடத்தின் முதல் தளம் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. அதில் இருந்த நோயாளிகள், உதவியாளர்கள் என 41பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும்

இந்தியாவில் முதலீடு செய்ய மோடி அழைப்பு

டாவோஸ், ஜன.23: இந்தியா என்றாலே வர்த்தகம் என்பதை புரிந்து கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் சர்வதேச தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இன்று பிற்பகலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் மோடி முக்கிய உரையாற்றுகிறார். சுவிஸ் நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார...
மேலும்

சீனாவில் 9 வயது பாசமலர் அண்ணனை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் சிறுமி

பீஜிங், ஜன.22: சீனாவில் மாற்றுத்திறனாளியான 12 வயது அண்ணனை தினமும் 9 வயது தங்கை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த 9 வயது சிறுமி டிங்ஸ்வாங். இவரது அண்ணன் டிங்ஃபுக்கு வயது 12. இந்த சிறுவனால் கை, கால்களை சுயமாக பயன்படுத்த முடியாது. இந்நிலையில் அவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து டிங்ஸ்வாங் தனது அண்ணனை வெயில், மழை, பனி...
மேலும்

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்

நியூயார்க், ஜன.19: மிகப்பெரிய விண்கல் ஒன்று வரும் பிப்ரவரி 4ம் தேதி பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2002 ஏஜே129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 லட்சம்...
மேலும்

ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: 6 பேர் பலி

மெல்போர்ன்,ஜன.1:புதுவருடத்தை கொண்டாடுவதற்காக கடல் விமானத்தில் சிலர் பயணம் செய்துள்ளனர். 20 நிமிடங்கள் வரையிலான இந்த பயணத்தில் கடல் விமானம் கோவன் என்ற பகுதியருகே நீருக்குள் 13 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. இதில் அதில் பயணம் செய்த 6 பேர் பலியாகினர். அவர்களில் சுற்றுலாவாசிகள் ரிச்சர்டு கசின்ஸ் (வயது 58), எம்மா பவுடன் (வயது 48), ஹெதர் பவுடன் (வயது 11), எட்வர்டு கசின்ஸ் (வயது 23) மற்றும்...
மேலும்

பாலியல் புகார்: மதரசா மேலாளர் கைது

லக்னோ, டிச.30: உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் யாசின்கஞ்ச் பகுதியில் ஜமியா கதீஜ்துல் குப்ரா லீலாப்னத் என்ற பெயரில் மதரசா ஒன்று இயங்கி வருகிறது. இது சிறுமிகளின் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி சையது முகமது ஜிலானி அஷ்ரப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மூத்த எஸ்.பி. தீபக் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த மதர்சா விடுதியில் 101...
மேலும்

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, டிச.20:மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்ப்பதற்காக 31 பேர் கொண்ட சுற்றுலா குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால மாயன் நகரை பார்ப்பதற்காக அந்த குழு சென்றுள்ளது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...
மேலும்

வாஷிங்டனில் ரெயில் விபத்து: 3 பேர் பலி -100 பேர் காயம்

வாஷிங்டன், டிச.19: அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சியாட்டில் பகுதியில் இருந்து போர்ட்லேண்டு நோக்கி அம்டிராக் பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் டகோமா நகருக்கு தெற்கே உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது ரெயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. சரக்கு ரெயில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு...
மேலும்

பிஷப் பொறுப்புக்கு பெண் நியமனம்

லண்டன், டிச.19: மிகப் பழமையான கிறிஸ்தவ பிரிவான சர்ச் ஆப் இங்கிலாந்து, முதன் முதலாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து 1534-ம் ஆண்டில் தனியாக சர்ச் ஆப் இங்கிலாந்து என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. மிக பழமையான இந்த அமைப்பின் கீழ் இருக்கும் அனைத்து பிஷப்-களும் இதுவரை ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், லண்டன் பிஷப்...
மேலும்

பிரிட்டன் தூதரக பெண் அதிகாரி கற்பழித்துக் கொலை

பெய்ரூட், டிச.18: லெபனானில் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இங்கிலாந்து தூதரகம் உள்ளது. இங்கு ரிபேகா டைகி (வயது30) என்ற பெண் அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் இவர் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிணமாக...
மேலும்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜாவா, டிச.16:  இந்தோனேஷியாவில் நள்ளிரவில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
மேலும்