Home » Category >உலகம் (Page 1)

சர்வதேச சிறந்த நடிகரானார் விஜய்

லண்டன், செப்.23:நடிகர் விஜய்யை 2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக தேர்வு செய்து ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது. விஜய் நடித்து அட்லி இயக்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ்,...
மேலும்

வியட்நாம் அதிபர் திடீர் மரணம்

ஹனோய், செப்.21:வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறை வால் காலமானார். 61 வயதான குவாங், ஹனோவிலுள்ள ஒரு ராணுவ மருத் துவ மனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். உள்நாட்டு மருத்துவர்,சர்வதேச மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இருந்த போதிலும், மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல்...
மேலும்

பாக். பிரதமர் அலுவலக 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டன

இஸ்லாமாபாத், செப்.18: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் கவர்னர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்று உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக...
மேலும்

உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில்

பெர்லின், செப்.18: ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் உலகின் முதல் ரெயில் நேற்று ஜெர்மனியில் தனது போக்குவரத்தை தொடங்கியது. கக்ஸாவன், பிரெமெர்ஹாவன் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே 100 கி.மீ. தொலைவுக்கு இந்த ரெயில் விடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாத்து டீசலால் ஏற்படும் மாசை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதன்முதலில் ரெயில் நீராவி மூலம் இயக்கப்பட்டது. பின்னர் டீசல் மூலமும் தற்போது மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது....
மேலும்

பிஜி தீவுப்பகுதியில் நிலநடுக்கம்

சுவா, செப்.17 பிஜி தீவுப் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படடது. இது 6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. தெற்கு தீவுகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தப்படி வீடுகளை விட்டு வெளியேறினர்.இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும்

ஆப்கானில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

காபுல், செப்.17:ஆப்கானிஸ்தானில் இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும்

சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவின் உயர் விருது

வாஷிங்டன், செப், 12:அமெரிக்காவில் வசிக்கு தமிழ்நாட்டு பெண்ணுக்கு அந்த நாட்டில் புதிய கண்டுபிடிப்புக ளுக்காக வழங்கப் படும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ராஜலட்சுமி நந்தகுமார் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் கணினி துறையில் தனது பொறியியல் படிப்பை சென்னையில் படித்து முடித்தார். இவர் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை...
மேலும்

ஆஸியில் ஆளில்லா விமானம்: சாதனைக்கு தயாராகிறது

சிட்னி, செப்.11: அஜித் ஆலோசனை அளிக்கும் ஆளில்லா விமான குழு- ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்க தயாராகி வருகிறது. ஆளில்லா விமானங்கள் வைத்து சாகசம் செய்யும், அஜித் ஆலோசனை அளிக்கும் ‘தக்‌ஷா’ குழு ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டியில் அசத்த தயாராகி வருகின்றது. நடிகர் அஜித் நடிகராக மட்டுமில்லாமல், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர் என பல துறைகளில் அசத்தி வருகிறார். தற்போது ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்யும்...
மேலும்

சாலையில் சென்றவர்களுக்கு கத்திக்குத்து

பாரிஸ், செப்.10:பிரான்ஸ் தலைநகரான பாரீசில் கத்தியுடன் பாய்ந்த ஒருவன் சாலையில் நடந்து சென்றவர்களை கண்மூடித்தனமாக குத்தியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அந்த ஏழு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவன் தீவிரவாதி அல்ல என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்றும் போலீ சார் தெரிவித்தனர்....
மேலும்

விமானம் ஆற்றுக்குள் விழுந்து 17 பேர் பலி

ஜுபா, செப்.9:தெற்கு சூடான் நாட்டிலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று 24 பயணிகளுடன் இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 17 பேர் பலியாயினர்.
மேலும்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ, செப்.6: ஜப்பானில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்னும் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 40 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு மின்சார இணைப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது....
மேலும்