Home » Category >உலகம்

உலகின் மிக நீள கடற்பாலம் சீனாவில் திறப்பு

சுகாய், அக்.23- சீனாவையும், ஹாங்காங்கையும் இணைக்கும் உலகிலேயே மிக நீளமான கடற்பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தொடங்கி வைத்தார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள்...
மேலும்

பேருந்துகள் மோதி 19 பேர் பலி

இஸ்லாமாபாத்,அக்.22:பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே புல் காஜி காட் பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமாபாத்திலிருந்து தேரா காஜி கான் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தும், எதிர் திசையில் வந்த மற்றொரு பேருந்தும் நேருக்கு நேராக மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்துகளில் முன்பக்கங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன....
மேலும்

இந்திய உளவுத்துறை மீது இலங்கை அதிபர் பாய்ச்சல்

கொழும்பு, அக். 17:என்னைக் கொல்ல இந்தியாவின் உளவுத் துறை அமைப்பான ரா முயற்சி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேச்சால் இந்தியா-இலங்கை இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. ஆதாரமற்ற இந்த பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சரவையில் வாராந்திரக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் அதிபர் மைத்ரி பால...
மேலும்

முடங்கிய யூடியூப் மீண்டும் இயக்கம்

வாஷிங்டன், அக்.17:உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக யூடியூப் முடங்கியது. இதனால் இணையதள வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த முடக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுனர்களின் முயற்சியால் ஒரு மணி நேரத்தில் இந்த கோளாறு சரி செய்யப்பட்டு யூடியூப் சேவை...
மேலும்

டிரம்புக்கு வந்த சோதனை

நியூயார்க், அக்.11:அமெரிக்க அதிபர் டிரம்பை இழிவுப்படுத்தும் வகையில், நியூயார்க் நகரத்தில் அவருடைய உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகுதியில் ‘என்மீது சிறுநீர் கழிக்கவும்’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்து தெருவில் வைத்துள்ள பில் கேப்லே என்பவர், டிரம்ப்...
மேலும்

2,000-ஐ நெருங்கும் இந்தோனேசியா சுனாமி பலி

பாலூ, அக். 9: இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான...
மேலும்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பிரெட் பதவியேற்பு

வாஷிங்டன்,அக்.7:அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கவனாக்கை அதிபர் டிரம்ப் நியமித்த போது அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. அவருக்கு எதிராக பெரும் போராட்டம் நடை பெற்று வந்தது. இந்த நிலையில் கவனாக் நியமனம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் 50க்கு 48 என்ற அடிப்படையில் கவனாக்கிற்கு ஆதரவாக ஒப்புதல் கிடைத்தது. இதனால்...
மேலும்

ஆஸ்திரேலிய நபர் சென்னையில் தற்கொலை

சென்னை, அக்.4: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஆடம் க்ராக் ஷெர்ட் (வயது 40). இவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் விஜிபி தெற்கு அவென்யூவில் கடந்த ஒரு மாதமாக வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் தங்கிவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு இவரது வீட்டின் கீழ்த்தளத்தில் தங்கியிருந்த ஆதித்யா என்பவர் எதர்ச்சையாக சென்று பார்த்தபோது, ஆடம் க்ராக் தூக்கில்...
மேலும்

மூன்று நகரங்களை விழுங்கிய சுனாமி பேரலை

ஜகர்த்தா, செப்.30:இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அலையில் 3 குட்டி நகரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் உயிரிழந்ததேலார் எண்ணிக்கை 400-ஐ தாண்டிவிட்டது. சேதம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகளுக்காக சர்வதேச உதவியை இந்தோனேசிய அரசு கேட்டுள்ளது. இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் சுலேவேசியா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில்...
மேலும்

இந்தியா வருகிறார் டிரம்ப்

நியூயார்க், செப்.29: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றபோது, வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு...
மேலும்

47 பேருடன் கடலுக்குள் பாய்ந்த விமானம்

நியூகினியா, செப்.28:47 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் ஒன்று ஓடுபாதையை தாண்டி கடலுக்குள் பாய்ந்தது. மைக்ரோனிசா என்னும் தீவிலிருந்து 36 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களை ஏற்றி கொண்டு ஜெட் விமானம் ஒன்று சுக் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் பப்புவா நியூ கினியாவில் தரையிறங்கிய போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டிச் 1.5 கிலோ மீட்டர் தாண்டிச் சென்று பசிபிக்...
மேலும்