w
Home » Category >குற்றம் (Page 79)

3 பேர் கைது

சென்னை, நவ.8: வேப்பேரி பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கொடுங்கையூரை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 52) நகை மதிப்பீட்டாளராக பணியில் இருந்துள்ளார். இவரிடம் கொடுங்கையூர் நிஜமுல்லா (வயது 31), செல்லா ரூபா (வயது 37) ஆகிய இருவரும் போலி நகையை அடகுவைத்து பணத்தை பெற்றுச்சென்றுள்ளனர். போலி நகைகளை அடகுவைத்து ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

போதை பவுடர் கடத்தி வந்த விமான பயணி கைது

சென்னை, நவ.8: கொழும்பிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் நூதனமான முறையில் போதை பவுடர் கொண்டு வந்த அமீர்ஹான் என்ற பயணி சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்பிலிருந்து இன்று காலை விமான வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அமீர்ஹான் என்ற பயணி ஒரு வித போதை பவுடரை நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது....
மேலும்

ரூ.150 கோடி தங்க பிஸ்கெட் பறிமுதல்

சென்னை,நவ.8:திருவனந்தபுரம் மற்றும் துபாயில் இருந்து விமானத்தில் தங்க பிஸ்கெட்களை கடத்தி வந்த தாய்-மகள் உட்பட 4பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது அவர்களிடமிருந்து ரூ. 1.50 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஏர் இந்தியா விமானம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பன்னாட்டு விமானமாகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானமாகவும் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் போது...
மேலும்

மூன்று வயது சிறுமி மர்ம கொலை

சென்னை, நவ.8:வில்லிவாக்கத்தில் நேற்று வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த 3வயது சிறுமி மாயமானார். இன்று காலை அந்த பகுதியில் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; வில்லிவாக்கம் பாரதி நகரில் வசித்துபவர் வெங்கடேசன். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு காவ்யா (வயது 3) என்ற சிறுமியும் 1 வயதில் ஆண்...
மேலும்

மக்களை பற்றி கவலைபடாமல் வெளிநாட்டு பயணம் ஏன்?

சென்னை, நவ.7: தனது தொகுதி மக்கள் நலன் கூட பார்க்காமல் வெளிநாடு பயணம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவருக்கான தகுதி இல்லை என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கலந்து...
மேலும்

திருத்தணி அருகே டிராக்டர் கவிழ்ந்து பலியான விவசாயி

திருத்தணி, நவ.7:  திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண நாயுடு (வயது58). இவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் வயலில் ஏர் உழுது விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது குறுக்கு வழியில் உள்ள ஒரு ஒடை பக்கமாக செல்லும் போது மழையால் ஈரப்பதத்தில் உள்ள மண் சரிந்ததில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து. இந்த விபத்தில் ராமகிருஷ்ண நாயுடு டிராக்டரில் சிக்கி பரிதாபமாக...
மேலும்

டெங்கு: பெண் பலி

விழுப்புரம், நவ.7:  திருக்கோவிலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். திருக்கோவிலூரை அடுத்த முதலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி கவிதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தி.குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த 2-ந் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது....
மேலும்

மின்சாரம் தாக்கி ஸ்டீல் பட்டறை ஊழியர் பலி

சென்னை, நவ.7: தண்டையார்பேட்டையில் கம்பெனியின் மின் விளக்கை போட்டபோது மின்சாரம்தாக்கி ஸ்டீல் பட்டறை ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று மற்றொரு சம்பவத்தில் பூந்தமல்லியில் மாடியில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவன் பலியானான். மற்றொருவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடந்த இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி தெருவைச்சேர்ந்தவர்...
மேலும்

நான்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு

அறந்தாங்கி, நவ.7: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுப்பையா (வயது 35), ராஜ்குமார் (32), கஜேந்திரன் (40), சகுபர் (38) ஆகிய 4 பேர் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
மேலும்

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

மதுரை, நவ.7:  திமுக மாஜி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக...
மேலும்

படாளம் பாலாற்றில் முழ்கிய வாலிபர் மாயம்

காஞ்சிபுரம், நவ.6: படாளம் பாலாற்றில் குளிக்க  சென்ற வாலிபர் மாயமானார். இதனை தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் தனது நண்பர்கள் நால்வருடன் படாளம் அருகே உள்ளே ரெயில்வே பாலத்தின் அருகில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சதீஸ்குமார் காணவில்லை எனத்...
மேலும்