Home » Category >குற்றம் (Page 5)

மூட்டை மூட்டையாக பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

செங்குன்றம், நவ.26: மாதவரம், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றத்தை அடுத்த மாதவரம், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் சாலையில் வீசப்பட்டிருந்த மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், மாதவரம் ஆடுசந்தை பகுதியில் வீசப்பட்டிருந்த 26 மூட்டைகள் மற்றும் ரெட்டேரியில் கிடந்த 10 மூட்டைகளை...
மேலும்

ரூ.37 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை, நவ.25:வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்ரா நிறுவன ஊழியரும், பயணியும் கைது செய்யப் பட்டுள்ளனர். பத்ரா நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பரிதுதின் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், விமானத் தில் வந்த பயணி ஒருவருக்கு உதவும் வகையில் அவர் கடத்தி வந்த தங்கத்தை வெளியில் எடுத்துச் சென்று மாற்றி கொடுக்கும்...
மேலும்

துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் மீட்பு

சேலம், நவ.25: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொழில் அதிபர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார். கடத்தல் கும்பலில் ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் 3 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சக்திவேல். கார் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் சக்திவேல். அப்போது இன்னோவா...
மேலும்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது

சென்னை, நவ.22: பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் நகரை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (வயது 41). இவர் வெளிநாட்டில் வேலை தேடிவந்துள்ளார். அப்போது, கேரளாவை சேர்ந்த ரவிசங்கர் (வயது 29) என்பவரை இவர் அணுகியுள்ளார். இதனிடையே, ரூ.1.80 லட்சம் பணம் பெற்று கொண்டு வேலையும் வாங்கி தராமல் ரவிசங்கர் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிறிஸ்துராஜா அளித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிந்து ரவிசங்கரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும்

அந்தமானில் அமெரிக்கர் கொலை

டெல்லி, நவ. 22: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரத்தை சேர்ந்தவர் ஜான் அலன் சவ் (வயது 26). இவர், உலகில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று அது குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் வெளியிட்டு வருபவர். அத்துடன், பிற நாடுகளுக்கு சென்று அவ்வப்போது மதபோதகர் பணியும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், சுற்றுலா விசா மூலம் அக்டோபர் மாதம் போர்ட் பிளேயருக்கு வந்த...
மேலும்

சுவிஸ் நாட்டு பெண்ணிடம் கைப்பை பறிப்பு

சென்னை, நவ.22: தி.நகர் அருகே ஆட்டோவில் சென்ற சுவிட்சர்லாந்து நாட்டு பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்துசென்ற மர்ம ஆசாமிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர், பால் கரோல் (வயது 28). சுற்றுலாவிற்காக கடந்த 20-ம் தேதி சென்னை வந்த இவர், தேனாம்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் தி.நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள...
மேலும்

நண்பரின் கைவிரலை கடித்து துப்பியர் கைது

சென்னை, நவ.22: குடிபோதையில் நண்பரின் கைவிரலை கடித்து துப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 50). பாத்திரத்திற்கு பாலிஷ் போடும் வேலை பார்த்துவந்துள்ளார். இதேபகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 38). சோபாசெட் பழுதுபார்க்கும் வேலைபார்த்துவந்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சத்தியசீலனுடைய இடது கையின் சுண்டுவிரலை...
மேலும்

சின்னசேலம் அருகே விபத்து: 4பேர் பலி

விழுப்புரம், நவ.21: சின்னசேலம் அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் சின்னசேலம் புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கட்டையில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்த தேவநாதன், அவரது மனைவி மாலினி (வயது 48), மகள் ரம்யா (வயது 18) கார் டிரைவர்...
மேலும்

ஜோத்பூர் விரைந்தது தனிப்படை போலீஸ்

சென்னை, நவ.21:  சென்னைக்கு ரெயிலில் வந்த 1000 கிலோ இறைச்சி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தனிப்படை போலீசார் ஜோத்பூருக்கு விரைந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்குமுன் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரெயிலில் மீன் பார்சல் என குறிப்பிட்டு பார்சல் ஒன்று வந்திறங்கியது. ஒருவிதமான வாசனை வீசியதன் அடிப்படையில், சந்தேகத்தின்பேரில், அந்த பார்சலை பிரித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை...
மேலும்

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம்: போலீசில் புகார்

சென்னை, நவ.21: லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த விமான பணிப்பெண்ணிடம் ஆசாமி ஒருவர் சில்மிஷம் செய்ததாக சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த விமான பணிப்பெண் விடுமுறையில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அவருடைய இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்த ஆசாமி அவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் அவர் போலீசில் புகார் செய்தார்....
மேலும்

கஞ்சா விற்ற 5 பேர் கைது

சென்னை, நவ.21: அமைந்தகரை என்.எஸ்.கே. பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அமைந்தகரை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருணா (வயது 30), ராஜேஷ் (வயது 20), ராவணன் (வயது 62), ரகுகுமார் (வயது 45) ஆகிய 4 பேரை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா...
மேலும்