Home » Category >குற்றம் (Page 46)

போதை பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி

சென்னை, ஜூன் 26: சர்வதேச  போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு  பேரணி நடைபெற்றது. இதனை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி சர்வதேச போதை பொருள் பயன்பாடுமற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று காலை சென்னை கோயம்பேட்டில்  நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல்...
மேலும்

காஞ்சியில் பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

காஞ்சிபுரம், ஜூன் 26: தொழுகைக்கு இன்று காலை இரண்டு மகன்களுடன் பைக்கில் சென்றவர் மீது கார்மோதியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம்அடைந்த மகன்கள் சிகிச்சை பெற்ற வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ÷செய்யார் அடுத்து ஆக்கூர்  கூட்ரோட்டைச் சேர்ந்தவர்  சனா உல்லா (வயது45). இவர் சேந்தமங்கலத்தில் மாந்தோப்பு குத்தைகைக்கு எடுத்துள்ளார்.இதனால் மகன்கள்  முஸ்சூர் (வயது 21), ரஷீத் (வயது 18) ஆகியோருடன் அங்கேயே...
மேலும்

காணாமல் போன 452 பேர் கண்டுபிடிப்பு

சென்னை, ஜூன் 26: சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன 452 பேரை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். சென்னையில் காணாமல் போன ஆண்கள்,பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் கடந்த ஒரு மாதத்தில்...
மேலும்

கேபிள் கார் அறுந்த விபத்தில் 7 பேர் பலி

ஸ்ரீநகர், ஜூன் 26: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் கேபிள் கார் கீழே விழுந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் குல்மார்க்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கேபிள் கார் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று கேபிள் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதில் பெரிய மரம் சாய்ந்து கேபிள் மீது விழுந்தது. இதில் அந்தக் கேபிள் அறுந்து போனதில் கேபிள் கார்...
மேலும்

கூவத்தில் குதித்த வாலிபர் உடல் மீட்பு

சென்னை, ஜூன் 26: சிந்தாதரிப்பேட்டை , அம்மா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). சிந்தாதரிப்பேட்டை மீன்மார்க் கெட்டில் பணியாற்றி வந்த இவர் நேற்றிரவு 8மணியளவில் பைக் மேம்பாலத்தின்மீது நிறுத்தி விட்டு சிந்ததாரிப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் மற்றும் தீயைணப்பு வீரர்களும் விரைந்து வந்து இரவு 1 மணி மணிவரை வாலிபரை தேடியும் கிடைக்கவில்லை. 2வது நாளாக...
மேலும்

கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: மாமனார், மருமகள் பலி

விழுப்புரம், ஜூன் 25: சிதம்பரம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்றுக்கொண்டு இருந்த கார் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் மாமனார் மருமகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் டிரைவராக பணிப்புரிந்து வந்தவர் ராஜகோபாலன் என்பவரின் மகனான நட்ராஜன்(வயது 60). இவரது மகன் செந்தில்(வயது 35). மருமகள் தேவிபாலா(வயது...
மேலும்

காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

சென்னை, ஜூன் 25:அடையாறில் காதல் ஜோடியை மிரட்டி ரூ. 5 ஆயிரம் பணம் பறிக்க முயன்ற பழைய கேடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அடையாறில் உள்ள ஓட்டல் ஒன்றில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி இருவர் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். வெளியே வந்த அவர்கள் தங்களது காரில் ஏறி அமர்ந்து புறப்பட தயாரானார்கள். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ்காரர்...
மேலும்

பைக் மோதி விபத்து: இரண்டு பேருக்கு காயம்

சென்னை, ஜூன் 25: கடற்கரை சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி பைக்கில் ஆதிகேசவன் என்பவர் சென்று கொண்டு இருந்தார். போர் நினைவு சின்னம் பகுதியில் இருந்து திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இரண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் பைக்கில் கலங்கரை விளக்கம்...
மேலும்

 பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு

சென்னை, ஜூன் 25:பால் வாங்க சென்ற பெண்ணிடம் 7 சவரன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வில்லிவாக்கம் பாபா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 67) இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்கு கடைத் தெரு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலையின்...
மேலும்

கொளத்தூரில் சப் – இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, ஜூன் 23: கொளத்தூர் வெற்றிவேல் நகரில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 54) இவர் மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்தார் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டியில் யாரும் இல்லாத நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகார் தொடர்பாக கொளத்தூர்...
மேலும்

20 சவரன் கொள்ளை

சென்னை, ஜூன் 23:சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீட்டிற்குள் புகுந்து 20 சவரன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை சைதாப்பேட்டை சூடியம்மன் பேட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 30). அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக உள்ளார். நேற்று இரவு 11.30 மணிக்கு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு உறங்கி உள்ளார். காலை...
மேலும்