Home » Category >குற்றம் (Page 4)

வெல்டர் வெட்டி கொலை

சென்னை, அக். 1:  மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). இவர், நேற்றிரவு அதே பகுதியில் தனது நண்பர் பிரசன்னாவுடன் (வயது 21) மது அருந்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த பிரசன்னா தனது நண்பர்களை அழைத்து வந்து ஆனந்தராஜனை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த...
மேலும்

உடலில் மறைத்து எடுத்து வந்த தங்கம் பறிமுதல்

திருச்சி, அக். 1: கொழும்பில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த 7 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்க...
மேலும்

மணல் கடத்தல்: டிரைவர் கைது

விழுப்புரம், செப்.30:கண்டமங்கலம் போலீசார் பக்கிரிப் பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பார்த்ததும் அதை நிறுத்துமாறு சைகை காட்டினர். இதைத்தொடர்ந்து லாரியை நிறுத்துவது போல் வந்து எஸ்ஐ சந்திரன் மீது மோதுவதுபோல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். பின்னர் போலீசார் அந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, மணல் கடத்தியது தெரியவந்தது. எஸ்ஐ மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்றதாக...
மேலும்

ரூ.5 லட்சம் கையாடல் ஊழியர் கைது

சென்னை, செப்.30:மதுரவாயலில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள நேதாஜி நகரில் முருகன் (வயது 49) என்பவர்  பர்னிச்சர் மற்றும் இம்பீரியல் என்ற பெயரில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் சூப்பர் வைசராக பணியாற்றிய வினோத்குமார்(வயது 29) என்பவர் ரூ.5 லட்சத்தை கையாடல் செய்ததாக மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரவாயல் போலீசார் வினோத்குமாரை கைது...
மேலும்

பெண்னை மிரட்டி 16 சவரன் நகை கொள்ளை

கும்பகோணம், செப்.30:கும்பகோணம் அருகே வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 16 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவாமி மலையை அடுத்துள்ள நாகக்குடி கிராமத்தில் நேற்று இரவு 10 மணி வரை மின்வெட்டு இருந்தது. அப்போது ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், ராஜேந்திரனின் மனைவி வசந்தா மற்றும் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து...
மேலும்

விதவைப் பெண் கற்பழித்துக்கொலை

சிதம்பரம், செப்.30:சிதம்பரம் அருகே விதவைப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐடிஐ மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிதம்பரம் அருகே பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் இவரது மனைவி பிரேமா வயது 45 அருணாச்சலம் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் இவர்களுக்கு நாகராஜ் வயது 25 என்ற மகன் உள்ளார் நாகராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து...
மேலும்

போலீஸ்போல் நடித்து பெண்களிடம் கைவரிசை

சென்னை, செப். 29:  அடையாறை தொடர்ந்து கே.கே. நகரிலும் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் இருந்து 8 சவரன் நகையை மர்மநபர்கள் சாதூரியமாக பறித்துகொண்டு தப்பியோடியுள்ளனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரு சம்பவங்களிலும், ஒரே கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.  கே.கே. நகரிலுள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரா (வயது 76). இவர், நிலஅளவை துறையில் பணியாற்றி ஓய்வு...
மேலும்

பெண் பிணம் தோண்டி எடுப்பு

சென்னை, செப். 27: பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் 6 மாதங் களுக்கு முன் மரணம் அடைந்த பெண்ணின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. பெரம்பூரை சேர்ந்த பாபு என்பவர் அமெரிக்காவில் இருந்தபோது அவரது தாயார் லலிதா (வயது 63) இறந்துவிட்டார். தாயாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பாபு புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில்...
மேலும்

ஜீப்பின் மேல் பெண்ணை கட்டி வலம் வந்த போலீஸ்

அமிர்தசரஸ், செப்.27: பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் விசாரணை கைதி பெண் ஒருவரை காவல்துறையினர் அவர்களது வாகனத்தின் கூரையில் கட்டி வைத்து கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து தகராறு வழக்கு தொடர்பாக அந்த பெண்ணின் மாமனாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வர போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். மாமனார் வீட்டிலேயே இல்லாததால் அந்த பெண்ணின் கணவரை அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். இதனை கடுமையாக எதிர்த்த...
மேலும்

அம்மிகல்லால் தாக்கி மனைவி கொலை

சென்னை, செப்.27:  மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அசோக்நகர் 87-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருவர் அண்ணாமலை. இவர் மத்திய அரசு தணிக்கைத்துறை அலுவலகத்தில் ஆடிட்டராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 51). இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும்...
மேலும்

செல்போன் பறிப்பு: 4 பேர் கைது

சென்னை, செப். 27: தொடர் செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.கே.பி. நகரை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர், செம்பியம், மகாகவி பாரதியார் (எம்.கே.பி.) நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தேறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, எம்.கே.பி. நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த தீபன் ராஜ்...
மேலும்