Home » Category >குற்றம் (Page 3)

கரு பரிசோதனை: கணவருக்கும் சிறை

சென்னை,டிச.4: கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறிய சட்ட விரோதமாக சோதனை நடத்தினால் கர்ப்பிணி பெண்களின் கணவரும் கைது செய்யப்படுவார் என தமிழக மருத்துவ சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக பரிசோதனைக்கூடம் நடத்திய கருவில் இருப்பதுஆணா? பெண்ணா? என்பதை தெரிவித்து வந்த ஆனந்தி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.  இந்த மாவட்டத்தில் 6 மையங்கள் இதுபோல் செயல்பட்டு வந்ததை மருத்துவ துறை கண்டு...
மேலும்

காரில் கடத்தப்பட்ட ரவுடி வெட்டிக்கொலை

காஞ்சிபுரம், டிச.3: படாளம் பகுதியில் நண்பர் வீட்டில் இருந்த ரவுடி ஸ்ரீதரை காரில் கடத்திய மர்ம கும்பல் அவரை கொலை செய்து விட்டு ஊரப்பாக்கம் அருகே உடலை வீசி சென்றனர். கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மாமண்டூரை அடுத்த படாளத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் 2...
மேலும்

மாடு திருடியவர் கைது: 3 பேருக்கு வலை

சென்னை, டிச.3: பூந்தமல்லி அருகே மாடு திருடிய கும்பலை சுற்றிவளைத்த பொதுமக்கள், பிடிப்பட்ட ஒருவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை, பூந்தமல்லி வரதராஜபுரத்தில் சாலையோரம் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிந்து கொண்டுள்ளது. அப்போது, வேன் ஒன்றில் இங்கு வந்த மர்மகும்பல், ஒரு மாட்டினை வண்டியில் ஏற்றிவிட்டு, 2-வது மாட்டினை ஏற்றுவதற்கு முயன்றுள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள்...
மேலும்

லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி: தம்பதிகள் கைது

சென்னை, டிச.3:  இரவு நேரங்களில் காரில்  செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டுவந்த தம்பதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தொழிலதிபதிரான இவர், நேற்றிரவு செங்குன்றத்தில் இருந்து காரில் வந்துள்ளார். பாடி மேம்பாலம் அருகே வந்த போது, காரினை வழிமறித்த 2 பெண்கள், அவரிடம் லிஃப்ட் கேட்டுள்ளனர். இவர் அந்த பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு சிறிதுதூரம் சென்றபோது, அந்த...
மேலும்

பெண் பயணியின் கைப்பை மாயம்

சென்னை, டிச.3:  ஈரோடை சேர்ந்தவர் கமலா (வயது 50). இவர், மதுரவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். கைப்பையை பேருந்து இருக்கையில் வைத்துவிட்டு, பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றுவிட்டு தனது இருக்கைக்கு வந்து பார்க்கும்போது, கைப்பை மாயமானது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின்பேரில், சி.எம்.பி.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை...
மேலும்

பொறியாளர் வீட்டில் கொள்ளை

சென்னை, டிச.3: சென்னை ஜெஜெநகர் சரோஜினி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், ஓஎன்ஜிசி-யில் பொறியாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைப்போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குபதிந்து...
மேலும்

முன்னாள் ரெயில்வே அதிகாரி வீட்டில் 45 பவுன் கொள்ளை

மதுரை, டிச.3: மதுரையில் முன்னாள் ரெயில்வே அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவரான சவுந்திரபாண்டியன் ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தின ருடன் சென்னை சென்றிருந்தாராம். இதனால் அவரது வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனராம்.  பின்னர்...
மேலும்

ரெயில் கொள்ளையன் ஊரில் துப்பாக்கி சூடு

சென்னை, டிச.3: ரெயில் கொள்ளையில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது மத்திய பிரதேசத்தில் போலீசார் மீது ரெயில் கொள்ளை கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் மத்திய பிரதேச மாநில குற்றப்பிரிவு தலைமை காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு...
மேலும்

காசு வைத்து சூதாடிய 23 பேர் கைது

சென்னை, டிச. 2:சென்னையில் காசு வைத்து சூதாடிய 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 ஆயிரம் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர், சவுதி ரியால் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஐஸ்அவுஸ் நடேசன் சாலையில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் அந்த வீட்டை சுற்றிவளைத்து போலீ சார் உள்ளே சென்றபோது அங்கு சூதாட்டம் நடைபெறுவதை கண்டனர்.
மேலும்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்

சென்னை, டிச.2:அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னையிலிருந்து மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த செய்தியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி இக்பால் என்பவரை கைது செய்தனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதி என்ற பெயரில் இவர...
மேலும்

வீடுவீடாக திருட்டு: 3 பேர் பிடிபட்டனர்

சென்னை, டிச. 2:ஆவடி பகுதியில் வீடுகளில் புகுந்து நகை திருடிய 3 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 23 சவரன் நகை மீட்கப்பட்டது. வீராபுரம் பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கி சோதனையிட்டனர். இதில் 3 பேரும் ஆவடி பகுதியில் வீடுகளில் நகைகளை திருடியவர்கள் என தெரியவந்தது. பிடிபட்ட மூவரில் அருண்பாண்டி யன்...
மேலும்