Home » Category >குற்றம் (Page 2)

பாரதிராஜாவிடம் விசாரணை: போலீஸ் முடிவு

சென்னை, மே 13:  இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குநர் பாரதிராஜாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். புகார் தொடர்பான ஆவணங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளரான வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையில் புகார் ஒனன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த ஜனவரி மாதம் வடபழனியில் நடைபெற்ற சினிமா பட துவக்க விழாவில் பேசிய பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை அவமதித்து...
மேலும்

ரஜினி மன்ற பேனர் கிழித்த 6 பேர் சிக்கினர்

சென்னை, மே 13: ரஜினி மக்கள் மன்ற பேனர் மற்றும் கொடியை நள்ளிரவில் கிழித்து சேதப்படுத்திய நாம்தமிழர் கட்சியைச்சேர்ந்த 6பேர் போலீசில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை பெரம்பூர் பகுதி ரஜினி மக்கள் மன்ற அலுவலக திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக மகாகவி பாரதி நகர் பகுதியில் இருந்து கொடுங்கையூர் பாலம் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் கொடிகள் மற்றும் பேனர்களை...
மேலும்

கல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்

சென்னை, மே 12:  ஷேர் ஆட்டோவில் சென்ற இன்ஜினியரிங் மாணவிக்கு, 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாணவி நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பல்லாவரத்திலுள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். இவர், கல்லூரி முடிந்ததும் பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு ரெயிலில் பயணம் செய்து, அங்கிருந்து...
மேலும்

இளைஞர்  கொலை :  6 பேர் கும்பல் கைது

சென்னை, மே 11:  தேனாம்பேட்டை, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மதன் தனது நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர் வைக்கும் தகராறில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பலை காஞ்சிபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி,மே 8: மலேசியவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் உள்ளாடைகளுக்குள் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்தது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை...
மேலும்

கல்வீச்சில் பலியான சென்னை இளைஞர்

காஷ்மீர்/சென்னை, மே 8: காஷ்மீரில் நடந்த கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த இளைஞரின் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் கொண்டுவரப்படும் இளைஞரின் உடல் அங்கிருந்து, அவரது சொந்த ஊருக்கு வாகனம்மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்தவர் திருமணி (வயது 25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள...
மேலும்

நகைக்கடையில் 45 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு

சென்னை, மே 7: அண்ணாநகரில் பூட்டிய பிரபல நகைக்கடையை உடைத்து 45 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 50ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் வசந்தம் காலனியைச்சேர்ந்தவர் வைஷ்ணவ ராமு (வயது 45). இவர் அண்ணா நகர் சிந்தாமணி நகரில் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஊழியர்கள்...
மேலும்

கதவை உடைத்து பணம், நகை கொள்ளை

அம்பத்தூர், மே 7: அம்பத்தூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் வாசு(வயது 52) இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஊழியராக பணியாற்றுகிறார். நேற்று இரவு கோடை...
மேலும்

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

அம்பத்தூர், மே 7: அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:அம்பத்தூர் அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் டேனியல் இவரது மனைவி மேரி ரீட்டா இவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல் அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று விட்டு...
மேலும்

கவுதம் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு

சென்னை, மே 7: கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மிகவும் ஆபாசமாகவும், பெண்களை கேவலமாக சித்தரிப்பதாகவும் கூறி அந்த படத்தை தடை செய்து. அதில் நடித்த கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளி வந்த...
மேலும்

துப்பாக்கி முனையில் ராக்கெட் ராஜா கைது

சென்னை, மே 7: பேராசிரியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேரை சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் போலீசார் கைது செய்தனர். மேலும்அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-தூத்துக்குடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார்...
மேலும்