Home » Category >குற்றம் (Page 1)

புழல் சிறையில் மேலும் செல்போன்கள் பறிமுதல்

செங்குன்றம், செப்.21:புழல் மத்திய சிறையில் தண்டனைப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பேட்டரிகள் கைப்பற்றப்பட்டன. புழலில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வெளியான புகாரையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதிகளின் அறைகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து சிறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள்...
மேலும்

நிலானி தற்கொலை முயற்சி

சென்னை, செப். 20 : சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது காதலியும் நடிகையுமான நிலானி இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி- மருத்துவமனையில் அனுமதி சின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு...
மேலும்

முதியவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 3பேருக்கு வலை

சென்னை, செப்.20: புதுக்கோட்டையைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் 2வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சித்தனர். அப்போது அவர் சத்தம்போடவே முதியவரை கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். இதை பார்த்த பொதுமக்களை அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த...
மேலும்

மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்

சென்னை, செப். 20:  நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று, ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டினை தனக்கு 10 நாட்களுக்கு ஷூட்டிங்கிற்கு விடுமாறு அவரது இரண்டாவது மகள் வனிதா விஜயகுமார், விஜயகுமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையேற்று, மகள் வனிதாவிற்கு தனது வீட்டினை ஷூட்டிங்கிற்காக விஜயகுமார் அனுமதியளித்துள்ளார். ஆனால், குறிப்பிட்டிருந்த நாட்கள் முடிவடைந்த நிலையில், தற்போது வீட்டினை திரும்ப ஒப்படைக்காமல் தன்னுடன் தகராறு செய்வதாக மகள்...
மேலும்

போதை மோகத்தால் வார்டனை கொலை செய்த சிறுவர்கள்

பாட்னா, செப்.20:பீகார் மாநிலத்தில் கூர் நோக்கு இல்லத்தை சேர்ந்த 5 சிறார் குற்றவாளிகள் இருமல் மருந்து மீது ஏற்பட்ட போதை மோகத்தால் வார்டனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவுக்கு 325கி.மீ. தொலைவில் உள்ள புர்னியே நகரத்தில் சிறார் குற்றவாளிகளுக்கான அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், சிறார் குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கூர்நோக்கு அறைகளில் வார்டன் பிஜேந்திர...
மேலும்

2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு

ஆத்தூர், செப்.19:குடிகார கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஆத்தூர் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்ற மகளும் உள்ளனர். கார்த்திக் ரிக் வண்டி வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பள...
மேலும்

ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

செங்குன்றம், செப்.16:செங்குன்றம் அருகே அடிதடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:செங்குன்றம் அருகே அலமாதி எடப்பாளையம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராகுல்(வயது 26). இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பெரியார் தெருவில் வந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. அவர்களை...
மேலும்

பார்வையற்ற மகனை கொலை செய்தது ஏன்?

சென்னை, செப்.16: பார்வையற்ற தனது மகனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவரது மனைவி பத்மா (வயது 35). இவர்களுக்கு பரத் (வயது 13) என்ற பார்வையற்ற மகன் இருந்தார். அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்....
மேலும்

கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

சென்னை, செப்.16: சென்னையில் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை போரூரை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் குடும்பத்துடன் வடபழனி முருகன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார். காரை கோயில் அருகே நிறுத்திவிட்டு...
மேலும்

போலீசாரின் போதை சோதனை கருவி பறிப்பு

சென்னை, செப். 16: வேளச்சேரியைச் சேர்ந்தவர் பூஷன் (வயது 20). இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்றிரவு தனது சொகுசு காரில் அடையாறு நோக்கி சென்றுள்ளார். சத்தியா ஸ்டுடியோ அருகே வந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அவரது காரை நிறுத்தி குடிபோதையை அளவிடம் பிரீத் அனலைசர் கருவியை வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த கருவியை பறித்த மாணவர் காரில் அந்த...
மேலும்

ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: ஆந்திர பெண் கைது

சென்னை, செப். 16: ஓடும் பஸ்சில் நர்சிங் பள்ளி உரிமை யாளரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் பணம் பறித்த ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் மரைக்காயர் (வயது 61). இவர் அங்கு நர்சிங் பள்ளி நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ரெயில் மூலம் எழும்பூர் வந்த அவர் அங்கிருந்து...
மேலும்