Home » Category >குற்றம்

தமிழகத்தில் கொள்ளை:கேரளாவில் இரும்புகடை

சென்னை,அக்.22:கேரளாவில் இரும்பு கடை வைத்துகொண்டு தமிழ்நாட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது அவர்களிடமிருந்து 30 சவரன் நகையை மீட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; சுண்ணாம்புகுளத்தூர் கிருஷ்ண நகரை சேர்ந்தவர் பல் மருத்துவர் ஜிவரதம் இவர் தனியார் மருத்தவமனையில் பணிபுரிகிறார். கடந்த ஜுன் மாதம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் வந்து வீட்டைப்...
மேலும்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை

மதுரை, அக்.22: மதுரை அனுப்பானடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கணேசன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

30 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை,அக்.22:கொழும்பிலிருந்து இன்று காலை சென்னை வந்த ரியாத் அஹமது என்ற பயணியிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டு ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவரிடம் சுங்கதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 986 கிராம். 1 கிலோ வரை தங்கம் கொண்டு வர அனுமதி என்பதை தவறாக பயன்படுத்தி இவர் 986 கிராம் தங்கத்தை கடத்தி வந்தாக கூறப்படுகிறது....
மேலும்

ரூ. 50 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

அம்பத்தூர், அக். 20:போலி நில பத்திரம் கொடுத்து ரூ. 50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருமழிசை போலீஸ் கூறியதாவது: அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் திருமழிசை பகுதியில் நிலம் வாங்குவதற்காக பாடி பகுதியை சேர்ந்த பாபு(வயது 52) மற்றும் மண்ணூர் பேட்டையை சேர்ந்த சுரேந்தரை (வயது 46) சந்தித்துள்ளார். அவர்கள் திருமழிசை பகுதியில் நிலம் இருப்பதாகவும்...
மேலும்

வெடிகுண்டு வீசி 3 ரவுடிகள் கொலை

புதுச்சேரி, அக்.19:புதுவையில் நள்ளிரவில் வெடிகுண்டு வீசி 3 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். தீபாவளி நாளில் ஒரே இடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை முத்தரையர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் நாய் சேகர் (வயது 24) இவரது நண்பர்களான சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). மேட்டுப்பாளையம்...
மேலும்

ஸ்ரீதரின் உடல் இன்று பிரேத பரிசோதனை

காஞ்சிபுரம், அக். 16: கம்போடியாவிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் உடல் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடம் ஸ்ரீதரின் உடல் ஒப்படைக்கப்படும். அசம்பாவிதங்களை தடுக்க, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபால் கடந்த 4-ம் தேதி கம்போடியாவில் தற்கொலை...
மேலும்

மாமியரை கொன்ற மருமகன் கைது

சென்னை, அக்.16: சொத்துக்களை அபகரிக்க நான்கு ஆண்டுக்கு முன்பு மாமியாரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த மருமகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது;  சென்னை மாங்காடு சிவன்தாங்கலில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 48) கணவர் சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். 2 மகள் உள்ளனர். மூத்த மகளை குன்றத்தூரை சேர்ந்த...
மேலும்

ஆருஷி கொலை வழக்கில் தாய்-தந்தை விடுதலை

சென்னை, அக்.12: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் 2008-ல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி மற்றும் சமையல்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆருஷியின் தாய், தந்தையரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. பல் மருத்துவர்களான ராஜேஷ் கல்வார் மற்றும் அவரது மனைவி முகுல் கல்வார் ஆகியோரது ஒரே மகள் ஆருஷி வீட்டில் சமையல்காரருடன் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக தாய்,...
மேலும்

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

சென்னை, அக்.12: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் வழிப்பறி செய்து தப்பியோடினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 29). சிப்காட்டில் வேலை பார்த்துவரும் இவர், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். டெங்க் ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் லட்சுமி அணிந்திருந்த 6...
மேலும்

ஜெயக்குமார் பற்றி அவதூறு: வாலிபர் கைது

சென்னை, அக்.12: அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டு வந்த மயிலாடுதுறையைச்சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- அமைச்சர் ஜெயக்குமாரும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் மாறிமாறி கருத்துக்களை வெளியிட்டு ஒருவர்மீது ஒருவர் வசைபாடி வந்தனர். மேலும் தினகரன் கூறிவந்த கருத்துக்கு ஜெயக்குமாரும் பதில் கொடுத்து வந்தார். இந்தநிலையில் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக...
மேலும்

ரெயிலில் மாணவர்களை குத்திய ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர், அக்.12: ஓடும் ரெயிலில் இரண்டு ஐ டி ஐ மாணவர்களை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர்கள் இருவர் அம்பத்தூர் ஐ டி ஐ யில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ரெயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் . திருநின்றவூர் – வேப்பம்பட்டு இடையே ஓடும் ரெயிலில் மர்ம நபர்கள் சிலர், மாணவர்களை கத்தியால்...
மேலும்