w
Home » Category >முக்கிய செய்தி (Page 321)

காதலை தட்டிக்கேட்ட காவலாளி கொலை

சென்னை, செப்.24:கள்ளக்காதலை கண்டித்த இரவு காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய வேலைக்கார பெண்ணை கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆட்டோ டிரைவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கோடாம்பாக்கம் வரதராஜன்பேட்டையை சேர்ந்தவர் சுகுமார் (வயது 55) மாற்றுத்தினாளி. இவர் நுங்கங்பாக்கம் மேல்பாடி முத்துத்தெருவில் உள்ள தனியார்...
மேலும்

100 சவரன் கொள்ளை: ஒருவர் கைது

சென்னை, செப்.24:சென்னை கோடம்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிவா என்பவரை கைது செய்து 51 சவரன் தங்ககாசுகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும்

ஜெ.கைரேகை வைத்தது எப்படி? : ஸ்டாலின் கேள்வி

சென்னை,செப்.24:மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட கைரேகை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் டிவிட்டரில் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை...
மேலும்

சுஷ்மாவுக்கு மோடி, ராகுல் பாராட்டு

புதுடெல்லி, செப்.24:ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், உலகம் இன்று இரண்டு விதமான போக்கினை கொண்டுள்ளது. ஒருபுறம் வளர்ச்சி அதற்கான திட்டங்கள், அதற்கேற்ற தொழில்நுட்பம், அந்த தொழில் நுட்பத்தை கையாள அறிஞர்கள்...
மேலும்

பகலில் சமையல்காரர் இரவில் கொள்ளையன்

சென்னை, செப். 24:வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 51 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் பூட்டிய வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து வடபழனி உதவி கமிஷனர் சங்கர் தலைமையில் தனிப்படை...
மேலும்

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகப்பட்டினம், செப்.24:நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்தனர்.ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகள் மீன்களை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர்.
மேலும்

ஜெயலலிதா மரணம்: விசாரணை நடத்தப்படும் – அமைச்சர்

தூத்துக்குடி, செப்.24: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தித்துறை அமைச்சர் கடர்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் விரைவில் விசாரணையை மேற்கொள்ளும் என்றும், செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ரூ.15 கோடியில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்ம்...
மேலும்

ஜெயலலிதா சிகிச்சை: மீண்டும் சர்ச்சை

சென்னை, செப்.23:  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இட்லி, சட்னி  சாப்பிட்டார் என்பது உட்பட நாங்கள் கூறியதெல்லாம் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் எங்களிடம் சிசிடிவி ஆதாரம் உள்ளது. சசிகலாவின் ஒப்புதல் பெற்று உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி...
மேலும்

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சென்னை,செப்.23: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருபவர் பேரறிவளன். அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பேரில் அவர் கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத...
மேலும்

துப்பாக்கியுடன் வந்த பள்ளி மாணவன்

சென்னை, செப்.23: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் துப்பாக்கியை கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் திடீரென்று தனது பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து மாணவர்களிடம் காட்டியபோது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த மாணவன் எடுத்துக் காட்டியது ஒரு துப்பாக்கி. இதனால்...
மேலும்