Home » Category >முக்கிய செய்தி (Page 3)

மீடூ விவகாரத்தில் சிக்கிய அர்ஜுன்

பெங்களூரு, அக்.20: மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி ஆகியோரை தொடர்ந்து தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன்  சிக்கியிருக்கிறார்.நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கனேசன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது மீடூ பாய்ந்துள்ளது. கன்னட உலகின் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் இவர் மீது குற்றச் சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர்...
மேலும்

ஐயப்பன் சன்னிதானம் வரை வந்த பெண்களால் பரபரப்பு

 சபரிமலை, அக்.19:ஐயப்பன் பக்தர்கள் மற்றும் சபரிமலை சன்னிதான அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்பால், கோவிலுக்குள் நுழையச் சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் மன்னர் மேல்சாந்திக்கு உத்தரவிட்டு உள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாத ஐயப்ப பூஜைக்காக புதன்கிழமை நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை கோவிலுக்குச்...
மேலும்

ஆம்னி பஸ் தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

விழுப்புரம், அக்.19:உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து மீது லாரி மோதியதில் லாரி மற்றும் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். பேருந்தில் இருந்த 3 பேரும் லாரியில் இருந்த ஒருவரும் உயிரிழந்தனர். ஜன்னல் வழியாக பயணிகள் வெளியே குதித்து உயிர் தப்பினர். சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ப்யணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை –...
மேலும்

வைரமுத்து மீது மற்றொரு பாடகி புகார்

சென்னை, அக்.19:மிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேமமாலினியும் புகார் கூறியிருக்கிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. சின்மயியை தொடர்ந்து சிந்துஜா...
மேலும்

வட சென்னை படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, அக்.19:வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வட சென்னை’ படத்திற்கு அப்பகுதி இளைஞர்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. எங்கள் பகுதி மக்களை ரவுடியாக சித்தரித்துள்ளதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் கடந்த 17-ந் தேதி வெளியான படம் ‘வடசென்னை’ இந்த படத்தில் 80-களில் வட சென்னை எப்படி இருந்தது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கிறார். படம் துவக்கம்...
மேலும்

சாலையோரம் உறங்கிய 6 பேர் விபத்தில் பலி

திருப்பதி, அக்.17:ஆந்திராவில் சாலையோரம் படுத்து உறங்கிய 6 பேர் லாரி மோதி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா. இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர். கர்னூல் அருகே அவர்கள்...
மேலும்

ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்

சென்னை, அக்.17:மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 26 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், நாடாளுமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரச்சார யுக்திகள், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்டவை...
மேலும்

சபரிமலையில் பக்தர்கள் போராட்டம்

சபரிமலை, அக்.17:சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில் பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிலக்கல்லில் பக்தர்களின் கூடரங்கள் அகற்றப்பட்டதால், போலீசுக்கும்,பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சபரிமலை கோயிலில் பாதுகாப்பை உறுதி செய்ய ,போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும்...
மேலும்

அதிமுக 47-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

சென்னை,அக்.17:அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா மாநிலம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ்., இபிஎஸ்., இணைந்து மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அதிமுகவை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்ஜிஆர் உருவாக்கினார். 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்...
மேலும்

நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்

சென்னை, அக்.17:ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாது தொடர்பாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். சேவை வரித்துறை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான புகார் நகல் அவரிடம் வழங்கப்பட்டது. புகார் மனுவில் கையெழுத்திட்டு அந்த நகலை விஷால்...
மேலும்

மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை, அக்.17:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு ரூ.65 லட்சம் அபராதமும், 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து இருப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி தூத்துக்குடி கிரேஸ் புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக...
மேலும்