Home » Category >முக்கிய செய்தி (Page 2)

திருவண்ணாமலையில் கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 7 ஆம் உற்சவத்தில் இன்று காலை விநாயகர் தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள தேரடி முனீஸ்வரசுவாமிக்கு அண்ணாமலையார் கோயில் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் 6.45 மணிக்கு...
மேலும்

வங்கக்கடலில் புதிய புயல்

சென்னை, நவ.20: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்....
மேலும்

3 அதிமுகவினர் விடுதலை பற்றி கவர்னர் விளக்கம்

சென்னை, நவ.20: 3 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தர்மபுரி பஸ் எரிப்பில் கைதான 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கவர்னரின் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பது வருமாறு:- அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் 3 ஆயுள் தண்டனை கைதிகளான நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன்...
மேலும்

புயல் நிவாரணப் பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்

சென்னை, நவ.20: புயல் நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 15-ந் தேதி அன்று கஜா புயலால் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம்...
மேலும்

ஆயுத குடோனில் வெடிவிபத்து: 6 பேர் பலி

வார்தா, நவ.20: மகாராஷ்டிர மாநிலத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பத்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத, காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்...
மேலும்

லாலு பிரசாத் உடல்நிலையில் திடீர் பின்னடைவு

ராஞ்சி, நவ.19:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் லாலுவின் உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போனதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென்று காலில் கடுமையான...
மேலும்

3 அதிமுகவினரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல்

சென்னை, நவ.19:தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற அதிமுகவை சேர்ந்த 3 பேரையும் விடுவித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2000 ஆண்டில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சை தர்மபுரியில் அதிமுகவினர் வழிமறித்து தீ வைத்து கொளுத்தியதில் மாணவிகள் கோகுலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 பேர் உடல்...
மேலும்

திருச்சி அருகே பயங்கர விபத்து : 4 பேர் பலி

திருச்சி, நவ. 19:திருச்சி அருகே காரின் டயர் வெடித்து மீடியனில் மோதி தூக்கி வீசப்பட்டு ஒரே குடும்பத்தைசேர்ந்தர 4பேர் பரிதாபமாக பலியானார்கள். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து அமைச்சர் எம்ஆர்.விஜயகுமார் விபத்தை நேரில்பார்த்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இன்று அதி காலை ஒரு காரில் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்....
மேலும்

குடும்பத்துக்கு ரூ.10,000?:முதல்வர் ஆலோசனை

சென்னை, நவ.19:கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அந்த பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வரை நிதியுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. மேலும் நிவாரணப் பணிகள் முடியும் வரை மின் கட்டணத்தை ரத்து செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி...
மேலும்

தி.மு.க.ரூ.1 கோடி நிதியுதவி: ஸ்டாலின்

சென்னை, நவ.19:கஜா புயல் நிவாரணப் பணிக ளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை கடந்த இரண்டு நாட்களாக நேரில் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மேலும்

இனி பாமக தனித்துப் போட்டியிடாது:அன்புமணி

சென்னை, நவ.19:இனி வரும் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிடாது என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் ஏதாவது ஒரு கூட்டணியில் இருப்போம். எந்த கூட்டணி என்பது, தேர்தலை பொறுத்து அமையும். நாடாளுமன்றத்துக்கும் மட்டும் தேர்தலா அல்லது சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தலா என்பதை பொறுத்து எந்த கூட்டணி என்பதை முடிவு செய்வோம்....
மேலும்