Home » Category >முக்கிய செய்தி

பலி 49 ஆக உயர்ந்தது

சென்னை, நவ.17: தமிழகத்தில் கஜா புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக மாறி நேற்று வேதாரண்யம் அருகே கரையை தாண்டியது. 130 கி.மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக் காற்றால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த...
மேலும்

தமிழகம்-புதுச்சேரியில் மூன்று நாள் கனமழை

சென்னை, நவ.17: வங்கக்கடலில் அந்தமானுக்கு மேற்கே உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக தெரிவிதிதுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கஜா புயல் தற்போது வலுவிழந்து லட்சத்தீவு...
மேலும்

கேரளாவையும் தாக்கிய கஜா

திருவனந்தபுரம், நவ.17: கேரள மாநிலம் இடுக்கியில் கஜா புயல் காரணமாக மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது. தற்போது கஜா புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த...
மேலும்

வேதனை ஆரண்யமான வேதாரண்யம்

வேதாரண்யம், நவ.17:கஜா புயலின் கொடூரத் தாக்குதலுக்கு பிறகு வேதாரண்யம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மக்கள் உணவு மற்றும் குடிநீரின்றி தவிக்கிறார்கள். கோடியக்கரை வனப்பகுதியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற மான்கள் கூட்டம் கூட்டமாக கொடூர புயலுக்கு பலியாகி உள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. வேதாரண்யத்தை கஜா புயல் தாக்க இருப்பதாக வந்த முன்னெச்சரிக்கையை தொடர்ந்து வேதாரண்யத்தை சுற்றியுள்ள மீனவ குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு...
மேலும்

டுவிட்டரில் சாதனை படைத்த ரஜினிகாந்த்

சென்னை, நவ.17:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை டுவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 மில்லியனை தொட்டது. இதன் மூலம் டுவிட்டரிலும் ரஜினிகாந்த் சாதனை படைத்துள்ளார். சமீப காலமாக அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். தங்களுடைய கருத்துக்களையும், அறிக்கைகளையும் இந்த சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். முனன்ணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரும் டுவிட்டரில் அதிக அளவில் கவனம் செலுத்தி...
மேலும்

கஜா புயல் ருத்ரதாண்டவம்:20 பேர் பலி

சென்னை, நவ.16:கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்ததையடுத்து மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. 10,000 தென்னை மரங்கள் உள்ளிட்ட சுமார் 70,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 21,000 மின்...
மேலும்

தமிழகத்திற்கு உதவ தயார்: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, நவ.16:கஜா புயல் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். புயல் சேதம் குறித்து இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். நிவாரண பணிகளை முழுவீச்சில் செய்வதற்கு மத்திய...
மேலும்

10,000 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன

திருச்சி, நவ.16:கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்சியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பிலான 10,000 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன மேலும் அந்த பகுதியில் பெரும்பாலும் இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கஜா புயல் காரணமாக திருச்சியில் இன்று அதிகாலை முதல்...
மேலும்

18-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, நவ.16:வரும் 18-ந் தேதி வங்கக்கடலில் தெற்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது தென் மேற்காக நகரும் என எதிர்பார்ப்பதா கவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று கூறினார். இதனால் 18, 19-ந் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா என்பது பின்னர் கணிக்கப் படும் என்று...
மேலும்

வேதாரண்யம், கோடியக்கரை துண்டிப்பு

தஞ்சாவூர், நவ.16:கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக வேதாரண்யம், கோடியக் கரை, அதிராமப்பட்டினம் ஆகிய ஊர்கள் அடியோடு துண்டிக்கப்பட்டன. இந்த பகுதிகளுக்கு கடந்த 10 மணி நேரமாக மீட்பு படையினரால் நெருங்க முடியவில்லை. கஜா புயல் அதிகாலையில் கரையை கடந்தபோது அதிராமப்பட்டினம் பகுதியில்தான் மிக அதிக அளவில் காற்றின் வேகம் இருந்தது. இதன் காரணமாக கோடியக்கரை பகுதியில் கடல் சீற்றமும் இருந்ததாக கூறப்படுகிறது. புயலின் சேதம் இந்த 3...
மேலும்

போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள்

சென்னை, நவ.16:கஜா புயல் நிவாரண நடவடிக்கை யில் போர்க்கால அடிப்படையில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்க ளுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.25,000மும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும்...
மேலும்