Home » Category >இன்று… (Page 44)

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த பெண் பலி

திருநெல்வேலி, அக்.23: கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொண்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுப்புலட்சுமி என்பவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களின்...
மேலும்

மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு தள்ளிவைப்பு

சென்னை, அக்.23:பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பி.எஸ்.என். எல்.) அதிநவீன உயர் இணைப்புகளை சன் டிவிக்கு சட்ட விரோதமாக வழங்கியதால், அரசுக்கு ரூ. 1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, சிபிஐ தொடர்ந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்ககோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, சிபிஐ கால அவகாசம் கேட்டது. இதையடுத்து, வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சென்னை...
மேலும்

இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை

சென்னை, அக்.23: தமிழகத்தில் இன்னும் இரண்டு தினங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: வட கிழக்குப் பருவமழை மூலமே தமிழகம் அதிக மழையைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரம், ராயலசீமா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வட கிழக்குப் பருவமழை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர்...
மேலும்

ஆர்கே நகரில் தேர்தல் நடத்த திமுக எதிர்ப்பு

சென்னை, அக்.22:சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.கொளத்தூர் தொகுதியில் இன்று பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை வெளியிட்டது. இது தொடர்பாக காவல்...
மேலும்

 மோடி குஜராத்தில் இன்று சுற்றுப்பயணம்

அகமதாபாத், அக்.22: பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில், இன்றுசுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாவ்நகர் மற்றும் வதோதரா மாவட்டங்களில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார். குஜராத்தின் காம்பே வளைகுடாவை ஒட்டியுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் கோகா நகரையும், பாரூச் மாவட்டத்தைச் சேர்ந்த தஹேஜ் நகரையும் இணைக்கும் ரூ.615 கோடி மதிப்பிலான நீர்வழிச் சாலைத்திட்டத்தின் முதல்கட்டப் போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த இரு...
மேலும்

நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை, அக்.21:நடிகர் விஜய் அடித்து அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இந்த படத்தில் நடிகர் விஜய் ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பிழப்பு ஆகியவற்றிற்கு எதிராக வசனம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மெர்சல் படத்தில் இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான ஜி.எஸ்டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க....
மேலும்

மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலி

நாகப்பட்டினம், அக்.20: நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து கழக கட்டிடம் உள்ளது. இன்று காலை அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என...
மேலும்

நடிகர் கமலஹாசன் மீது போலீசில் புகார்

சென்னை, அக்.19:நிலவேம்பு குறித்து தவறான கருத் துக்களை கூறி மக்களிடம் அச்சத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்து வழக்கு தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சென்னை பெரியார் நகரை சேர்ந்த வர் தேவராஜன். இவர் ஒரு சமூக ஆர்வலர். அவர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனக்கு சர்க்கரை நோய்...
மேலும்

ஆர்கே நகரில் வெற்றி பெறுவேன்: ஜெ.தீபா

சென்னை, அக். 19ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெ. தீபா கூறி உள்ளார். திருச்சியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் ஆர்.கே. நகர் தேர்தல் எப்போது வந்தாலும் எம்.ஜி.ஆர்-அம்மா தீபா பேரவை சார்பில் நான் போட்டியிடுவேன் என்றார். தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளவில்லை என்றும் இபிஎஸ்-ஒபிஎஸ் அணியினர் கட்டாயத்தின் பேரில் இணைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை...
மேலும்

மெட்ரோ: மே தினப் பூங்கா முதல் டிஎம்எஸ் வரை நிறைவு

சென்னை, அக்.17: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மே தின பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரையிலான சுரங்கப் பணிகள் இன்றுடன் முடிவடைந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் தடுப்பை உடைத்து வெளியே வந்த போது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து விரைவில் துவங்குவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்...
மேலும்