w
Home » Category >இன்று… (Page 3)

96% ஆசிரியர்கள் வருகை

சென்னை, ஜன.29: போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, 96% பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது...
மேலும்

ஏழைகள் உரிமைக்காக குரல் கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மோடி இரங்கல்

புதுடெல்லி, ஜன.29: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 1930-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், மிகப்பெரிய தொழிற் சங்கவாதியாக திகழ்ந்தார். சோசலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோஹியாவால் ஈர்க்கப்பட்ட பெர்னாண்டஸ், அந்தக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதன்முறையாக பம்பாய் தெற்கு தொகுதியில்...
மேலும்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

புதுடெல்லி, ஜன.29: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. மிகப்பெரிய தொழிற்சங்கவாதியாக திகழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய தலைவர்களில் ஒருவராவார். 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது ரெயில்வே அமைச்சராக திறம்பட பணியாற்றினார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்ற பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். 1998 முதல் 2004...
மேலும்

ஐஆர்சிடிசி ஊழல்: லாலு குடும்பத்துக்கு ஜாமீன்

புதுடெல்லி, ஜன.28:ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் மற்றும் பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது, ஐஆர்சிடிசி ஓட்டல்களை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் அளித்த தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும்...
மேலும்

எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு

மதுரை, டிச.27:மதுரையில் நடைபெற்ற பிஜேபி மண்டல மாநாடு மூலம் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், 10 சதவீத இட ஒதுக்கீட்டை சுயநல சக்திகள் எதிர்ப்ப தாகவும், இந்திய அளவில் எதிர்மறை சக்திகளிடம் இளைஞர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 3 பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவகல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குத்துடன் செயல்பட்டு வருகிறோம். இதன்...
மேலும்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

மவுண்ட் மவுங்கனுயி, ஜன. 26:  நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 வெற்றியுடன் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கனுயிவிலுள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ்...
மேலும்

தேசியக்கொடியேற்றிய கவர்னர் பன்வாரிலால்

சென்னை, ஜன.26:சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் தேசிய கொடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றி மரியாதை செலுத்தினர். 70-வது குடியரசு தினம் இன்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த கவர்னர், முப்படை அதிகாரிகளுடன் மரியாதை செலுத்தினார். காலை 7.45 மணியளவில் காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா காண கூடியிருந்த மக்களுக்கு காரில் இருந்தபடியே...
மேலும்

ரஜினி மன்ற நிர்வாகி விடுவிப்பு

சென்னை, ஜன.25:ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த டாக்டர் என்.இளவரசன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இளவரசனின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி மக்கள் மன்றத்தில் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவதாக சுதார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வடபழனி ரெயில் நிலைய வளாகத்தில் திடீர் தீ

சென்னை, ஜன.25: வடபழனி மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை 4 25 மணியளவில் திடீர் தீ ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரெயில் ஸ்டேஷன் கண்ட்ரோலர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும்

‘தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது’ 

புதுடெல்லி, ஜன.24: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துளளது. எதிர்வரும் தேர்தல்களில் குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால் அமமுக கட்சிக்கு சின்னத்தை தர முடியாது என்றும், தேர்தல் நேரத்தில்...
மேலும்

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்றிரவு விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா, ஜன.24: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி யைமத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் மைக்ரோசாட் ஆர் என்ற இமேஜிங் செயற்கைக்கோள் மற்றும் கலாம்சாட் என்ற 10 செ.மீ கியூப் வடிவிலான மாணவர்கள் வடிவமைத்த செயற்கைக்கோளும் செலுத்தப்பட உள்ளது. ஹாம் ரேடியோ சேவைக்காக கலாம்சாட் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இதேபோல் புவியை கண்காணிக்கும் நோக்கில் மைக்ரோசாட்-ஆர் அனுப்பப்படுகிறது. இதற்கான 28 மணி...
மேலும்