Home » Category >இன்று… (Page 2)

10 ஆயிரம் தியேட்டரில் ரஜினியின் ‘2.0’ ரிலீஸ்

சென்னை, நவ.14: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 படம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் 2.0. இந்த படத்தில் ரஜினியுடன் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், எமிஜாக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான்...
மேலும்

பிஜேபி பலசாலியான கட்சி: ரஜினி

சென்னை, நவ.13: ராஜீவ் காந்தி கொலை கைதிகள் ஏழு பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ராஜீவ் கொலை கைதிகள் பற்றி தெரியாத அளவுக்கு தான் ஒன்றும் முட்டாளல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். பிஜேபி ஆபத்தான கட்சியா என்பது பற்றி மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நரேந்திர மோடியை...
மேலும்

கஜா புயல் : சென்னை தப்பியது

சென்னை, நவ.12:தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் மேலும் வலுவடைந்து, தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடலூருக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே 15-ந் தேதி புயல் கரையை கடக்கும். இதனால் சென்னைக்கு புயல் அபாயம் நீங்குகிறது. வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு, கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்முறை புயலுக்கு பெயர் சூட்டும் பொறுப்பு,...
மேலும்

மத்திய அமைச்சர் மரணம்: ஜனாதிபதி, மோடி இரங்கல்

பெங்களுர், நவ.12:மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார் நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிஜேபியை சேர்ந்த இவர் 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். அதன்பின் 6 முறை அதே தொகுதியில் வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடையாத இவர் கர்நாடக மாநில பிஜேபி...
மேலும்

தமிழகத்துக்கு மீண்டும் ரெட் அலர்ட்

சென்னை,நவ.11:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக மாறியுள்ளது. கஜா என பெயரிடப் பட்டுள்ள இந்த புயல் 15-ந் தேதி கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கிறது. இதையொட்டி வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் வடதமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத...
மேலும்

தமிழ்நாடு முழுவதும் குரூப்-2 தேர்வு

சென்னை,நவ.11:டிஎன்பிஎஸ்சிகுரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று காலை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1200 காலி இடங்களுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள். நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் , உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறைநன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்புஅலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு...
மேலும்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது

சென்னை, நவ.10:தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளில் 14-ந் தேதி முதல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின்...
மேலும்

சரண்டரான ‘சர்கார்’: சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனம் நீக்கம்

சென்னை, நவ.9: சர்கார் சர்ச்சை விஸ்வரூபமெடுத் துள்ளதை அடுத்து அதிமுகவினரின் போராட்டத்திற்கு படக்குழுவினர் பணிந்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனம் உள்ளிட்டவை நீக்கப்பட்டன. மறுதணிக்கை முடிந்ததை அடுத்து பிற்பகலில் காட்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தில் முதல் போஸ்டர் வெளியிட்ட போதே விஜய் புகைப்பது போன்ற காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி...
மேலும்

‘சர்கார்’ படத்துக்கு அமைச்சர்கள் கண்டனம்

சென்னை, நவ.8:விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், ஜெயலலிதாவை விம்ர்சிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘சர்கார்’ படத்தைத் தயாரித்தவர்கள், அரசியல் உள்நோக்கத்தோடு, வன்மத்தோடும் சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து...
மேலும்

தமிழக கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து

சென்னை, நவ.5:தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். கவர்னர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தீபங்களின் விழாவான தீபாவளி மகிழ்ச்சியை பெருக்கும் நாளாக இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து குடும்பங்களிலும் இந்த தீபாவளி, ஒளியையும், மகிழ்ச்சியையும்...
மேலும்

பட்டாசு வெடிக்கும் நேரம்

சென்னை, நவ.2:  தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை யடுத்து இந்த அனுமதி வழங்கப் படுவதாகவும், பொது மக்கள் குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி...
மேலும்