Home » Category >இன்று…

தேர்தலில் போட்டியா?: ரஜினி பேட்டி

சென்னை, ஜூலை 15:மக்களவை தேர்தலில் போட்டியிடு வது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். மேலும் 8 வழிச்சாலை பயன்தரும் திட்டம் பயன் தரும் திட்டம்தான் என் றும், ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ போலீசில் ஒப்படைத்த சிறுவன் யாசின் படிப்பை செலவை தாம் ஏற்பதாக அவர்...
மேலும்

குரங்கனி தீ :125 பக்க அறிக்கை தாக்கல்

சென்னை, ஜூலை 13:குரங்கனி தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று 125 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சரியான பயிற்சி இல்லாதவர்கள் மலையேற்றதற்கு அழைத்துச் செல்லப்பட்டது, வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க உரிய அமைப்பு இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கனி மலைப் பகுதியில் உள்ள...
மேலும்

நரசிம்மராவ் உறவினருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை

புதுடெல்லி, ஜூலை 13: யூரியா உரம் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் உறவினர் சஞ்சீவராவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1996-ம் ஆண்டு தேசிய உரம் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் ரூ.133 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வழக்கு தொடர்ந்தது. உர நிறுவனத்திற்கு 2 லட்சம் மெட்ரிக் டன் யூரியா...
மேலும்

கமல் கட்சியில் மாற்றம்

சென்னை, ஜூலை 12:கமல்ஹாசன் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை முழு பலத்துடன் சந்திக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் நடிகர் கமல்ஹாசன் தாக்கி பேசியிருந்தார். இதனையடுத்து அரசியலுக்கு வந்து பேசுங்கள் என அமைச்சர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய...
மேலும்

முட்டை நிறுவனம் ரூ.1350 கோடி வரி ஏய்ப்பு 

சென்னை, ஜூலை 11:அரசுக்கு முட்டை, சத்துமாவு ஆகிய வற்றை சப்ளை செய்யும் கிறிஸ்டி பிரைடுகிராம் இண்டஸ்ரி மற்றும் அக்னி குழும கம்பெனிகள் ஆகியவற்றில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.1350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும் அன்னிய செலவாணி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.கிறிஸ்டி பிரைடுகிராம் என்ற நிறுவனம் சத்துணவு திட்டத்திற்கு தேவையான முட்டைகள் மற்றும்...
மேலும்

பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜூலை 11:தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு முன்ஜாமீனுக்கு கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் ஒன்றில், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு...
மேலும்

தஷ்யந்த்க்கு தூக்கு உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூலை 10:  சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னையை அடுத்த போரூர் நந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினியை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, கடந்த 2017 ம் ஆண்டு மாங்காடு...
மேலும்

லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

சென்னை, ஜூலை 9: தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். உறுப்பினர் ஆதரவுடன் லோக் ஆயுக்தா மசோதா சட்ட சபையில் நிறைவேறியது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக ஜூலை 10ம் தேதி காலகெடுவை உச்ச நீதிமன்றம் விதித்தத்து.நாளையுடன் உச்சநீதிமன்ற காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில்,...
மேலும்

ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, ஜூலை 7:  மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  தமிழக சட்டமன்றத்தின் பதவி காலம் 2021-ல் தான் முடிவடைகிறது என்பதால் அடுத்த ஆண்டில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக...
மேலும்

சட்ட விதிகளுக்குட்பட்டே டிஜிபி நியமனம்

சென்னை, ஜூலை 5:சட்டதிட்ட விதிகளுக்குட்பட்டுத் தான் தமிழகத்தில் டிஜிபி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். சட்டசபையில் முதலமைச்சர் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது 29 மாநிலங்களில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே...
மேலும்

லோக் ஆயுக்தா மசோதா நாளை தாக்கல்

சென்னை, ஜூலை 4: தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களில் வருகிற 10-ந் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பிஜேபி தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொது நல மனுவில் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று...
மேலும்