Home » Category >Uncategorized

வைகோ, முத்தரசன் உள்பட 250 பேர் கைது

திருவாரூர், ஜன.28: காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் திருச்சி மெயில் ரெயிலை தடுத்து நிறுத்திய வைகோ, முத்தரசன் மற்றும் 250 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய நீர் இல்லாத காரணத்தால் பயிர்கள் கருகி...
மேலும்

செல்லம்மாள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சென்னை, ஜன.13: கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பாரம்பரிய உடைகளான பாவாடை தாவணி மற்றும் சேலை உடுத்தி பொங்கலைக் கொண்டாடினர். நிமிர்வு கலையம் குழுவுடன் இணைந்து கல்லூரி மாணவியரும் பறை நடனம் நிகழ்த்தினர். கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கும்மி போன்ற தமிழரின்பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.உரியடி திருவிழாவும் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்....
மேலும்

களத்தில் நண்பர்கள் என பார்ப்பதில்லை: கோலி

கேப் டவுன், டிச.31: தென்னாப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் என் நண்பர்தான். அதற்காக போட்டி என்று வந்துவிட்டால் களத்தில் வேறுவிதமாகவே இருப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார். இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட அங்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் செய்தியாளர்களைச் சந்தித்த...
மேலும்

இளம்பெண்கள் இடையே அடிதடி வாக்குவாதம்

சென்னை, நவ.22: இன்று காலை 8.30 மணிக்கு கிண்டி ரெயில்வே நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து ஒரு மின்சார ரெயிலும் கடற்கரையில் இருந்து மற்றொரு ரெயிலும் ஒரே நேரத்தில் வந்து நின்றன. இதனால் 2 ரெயில்களில் இருந்தும் அதிக அளவில் பயணிகள் இறங்கினர். இதனையடுத்து ரெயிலில் இருந்து இறங்கிய 3 பெண்கள் படிகட்டில் ஏற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டனர்.
மேலும்

தமிழக அரசுக்கு உலக வங்கி பாராட்டு

சென்னை, நவ.21: தமிழக மக்கள் நல்வாழ்வு துறையை உலக சுகாதார நிறுவனம் , ஐ.நா.சபை உள்ளிட்டவை பாராட்டி வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகம் தான் மக்கள் நல்வாழ்வு துறையில் சிறந்து விளங்குவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி புதிதாக மருத்துவ...
மேலும்

டாஸ்மாக் இல்லாத தமிழகம்: வாசன் கோரிக்கை

சென்னை, நவ.14: தமிழகத்தில் இனிமேல் புதிதாக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் ஏற்கனவே உள்ள அரசு மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில், உள்ளாட்சி பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுபானங்களை விற்றுதான் மக்களை, தமிழக அரசு காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் அது செயலற்ற அரசுக்கு...
மேலும்

வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ.12:தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மைய பகுதி அதே இடத்தில் நீடீக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும்

மீன்வள பல்கலைக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை, நவ.8: நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் சீன முறையிலான மீன்குஞ்சு பொரிப்பகம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறுவில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல்...
மேலும்

3 கெட்டப்களில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு படங்களையும் இயக்கி வருகிறார். முதலில் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஒரு கெட்டப்பின் ஷýட்டிங்கை முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அதன் பிறகு மீண்டும் மற்றொரு கெட்டப்பில் விக்ரம்...
மேலும்

மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் 8 பேர் இடைநீக்கம்

சென்னை, நவ.2: சென்னையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் 8 பேரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி உத்தரவிட்டார். சென்னை, கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை, அப்பகுதியைச் சேர்ந்த பாவனா (10), யுவஸ்ரீ (8)...
மேலும்